உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய ரஜிஷா விஜயன்.. சர்தார் 2 நடிகை!
சென்னை: தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி ரசிகர்களை வைத்துள்ளார் நடிகை ரஜிஷா விஜயன். தமிழில் தனுஷுடன் கர்ணன், சூர்யாவுடன் ஜெய்பீம், கார்த்தியுடன் சர்தார் மற்றும் பைசன் ஆகிய முக்கியத் திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டின் கவனிக்கக்கூடிய நாயகியாக வலம் வருகிறார்.
நடிகை ரஜிஷா விஜயன்: மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'மஸ்திஷ்கா மரணம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் வெற்றிப்பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடையாளமே தெரியல: இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரஜிஷா விஜயனின் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. அதற்கு காரணம் அந்த போட்டோவில் அவர் மெரூன் நிறத்தில் உடலோடு ஒட்டியபடி உடை அணிந்து இருக்கிறார். அந்த போட்டோவை பார்க்கும் போது ரஜிஷா விஜயனுக்கு என்ன ஆச்சு ஏன் உடல் எடையை அடியோடு குறைத்து, எலும்பும் தோலுமாக இருக்கிறார் என்று தான் கேட்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு உடல் மெலிந்து காணப்படுகிறார். கர்ணன், ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் கொஞ்சம் கொழுக்கொழுவென, குடும்பப் பாங்கான தோற்றத்தில் ரஜிஷாவைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, அவரது இந்தத் திடீர் உடல் எடை குறைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவலையில் ரசிகர்கள்: சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், பழையபடி பப்ளியான லுக்குக்கு மாறிடுங்க.. இந்த லுக் உங்களுக்கு செட் ஆகல என்றும், ஏன் இவ்வளவு ஒல்லியாகிட்டீங்க என்றும் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். புது பட வாய்ப்புகளுக்காக இந்த அளவுக்கு எடையைக் குறைத்துள்ளாரா அல்லது 'சர்தார் 2' பட கேரக்டருக்காகவா என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
