“மீடூ... தனுஸ்ரீதத்தா என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார்”.. ராக்கி சாவந்த் புகாரால் பரபரப்பு!

தனுஸ்ரீ தத்தா தன்னைப் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.

மும்பை: பிரபல நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை உண்டாக்கிய நடிகை தனுஸ்ரீதத்தா மீது பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.

நாடுமுழுவதும் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் காலா படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் புகார் திரைத்துறையினரைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

தனுஸ்ரீ புகார்:

தனுஸ்ரீ புகார்:

தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காமல் பாலிவுட் படங்கள் பக்கம் சென்றார். அப்படியாக பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படப்பிடிப்பின் போது, நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

போலீசில் புகார்:

போலீசில் புகார்:

இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார் தனுஸ்ரீ. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

அவதூறு வழக்கு:

அவதூறு வழக்கு:

ஆனால் சம்பந்தப்பட்ட அந்த படப்பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், ‘ தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர்' எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து தனுஸ்ரீக்கு எதிராக பல கருத்துக்களையும் கூரி வருகிறார். இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

மிரட்டல்:

மிரட்டல்:

இதற்கு பதிலடியாக ராக்கி சாவந்த்தும் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், "இந்த விஷயங்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். ஆனால் இன்று நான் உணர்கிறேன். என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும், கொலை செய்யப் போவதாகவும் எனக்கு மிரட்டல் வருகிறது. இது குறித்து நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன்" என்றார்.

ஓரினச் சேர்க்கையாளர்:

ஓரினச் சேர்க்கையாளர்:

இந்நிலையில், தனுஸ்ரீ தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர் மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஒருநாள் நான் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது தனுஸ்ரீ என் வாயில் சிகரெட்டைவலுக்கட்டாயமாக திணித்து புகைக்க வைத்தார். மேலும் அவர் ஓரினச் சேர்க்கையாளர். அவருக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது.

என்னையும் கூட:

என்னையும் கூட:

பெண்களை மட்டுமே அவருடைய ஆசைக்குப் பயன்படுத்துவார். இதே போல ஒரு நாள் என்னையும் தனுஸ்ரீ தத்தா பலாத்காரம் செய்து விட்டார். இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை அவருக்கு வாங்கி கொடுக்க உள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார். ராக்கியின் இந்தப் புகார் திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X