எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ… காதலில் உருகும் ரகுல் ப்ரீத்.. காதலர் யாருனு தெரியுமா ?

சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

ரகுல் ப்ரீத் சிங் நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருக்கும் நடிகர் நடிகைகள் இணையத்தின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

கிரட்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். இத்திரைப்படத்தை அடுத்து, தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

பல படங்களில்

பல படங்களில்

புத்தகம்,என்னமோ ஏதோ , ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழில் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. தற்போது இவர் இந்தியன் 2 திரைப்படத்திலும், அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நன்றி அன்பே

நன்றி அன்பே

இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சிறப்பான நாளில் தனது இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியோடு கைகோர்த்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார் ரகுல்பிரீத் சிங். இதில், நன்றி அன்பே, இந்த ஆண்டு நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையை வண்ணமயமாக்கியதற்கும், என்னை சிரிக்க வைப்பதற்கும் நன்றி. இனி ஒன்றாக இணைந்து நமக்கான நினைவுகளை உருவாக்குவோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

அதேபோல ஜாக்கி பாக்னானியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீ இல்லாமல் நாட்கள் நாட்களாக இல்லை. சுவையான உணவை நீ இல்லாமல் சாப்பிட பிடிக்கவில்லை. ஒரு உன்னத நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் எந்நாளும் பிரகாசமாக இருக்கட்டும் என்று பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார்.

மோகினி படத்தில்

மோகினி படத்தில்

2009-ல் வெளியான கல் கிஸ்னே தேகாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜாக்கி, F.A.L.T.U, ரேங்க்ரெஸ் மற்றும் வெல்கம் 2 கராச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதே போல தமிழில், த்ரிஷாவுடன் மோகினி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, நடிகைகள் காஜல் அகர்வால், தாரா சுதாரியா, பிரக்யா ஜெய்ஸ்வால், சோஃபி சௌத்ரி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்ட இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X