திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி.. இளசுகளை திக்குமுக்காட வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

சென்னை: இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் திருமணமான நிலையில், திருமணத்திற்கு பிறகும் தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால், பெரிதாக வலம் வரமுடியவில்லை. அதன் பிறகு முன்னணி நடிகர்களான கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது..

Actress rakul preet singh glamorous photos trending on social media

இந்தியன் 2: தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த போதும், இவருக்கு தமிழில் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது, சிறிய கேப்புக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress rakul preet singh glamorous photos trending on social media

திருமணம்: தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலர், ஜாக்கி பக்நாணியை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் கோவாவில் ஆடம்பர ஹோட்டலில் தடபுடலாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், பாலிவுட் ஜோடியான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளாத சில பிரபலங்கள் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actress rakul preet singh glamorous photos trending on social media

கவர்ச்சி போட்டோ: கவர்ச்சிக்கு குறையே வைக்காத, ரகுல் பிரீத் சிங் திருமணத்திற்கு பிறகும் தாறுமாறான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Actress rakul preet singh glamorous photos trending on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X