250 கோடி நஷ்டம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு.. வேதனையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை: இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது கணவருக்கு, தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நடிகை மிகுந்த மனவேதனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தீரன் அதிகாரம் ஒன்று: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண்விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால், பெரிதாக இவரால் பிரகாசிக்க வரமுடியவில்லை. இதையடுத்து, கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

இந்தியன் 2: அந்த படம் வெற்றிப்படமாக இருந்த போதும், இவருக்கு தமிழில் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது, சிறிய கேப்புக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் பல பிரச்சனைகளை கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார் இப்படம் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருமணம்: தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருந்த ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலர், ஜாக்கி பக்னாணியை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம், பிப்ரவரி மாதம் கோவாவில் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை தொடங்கிய இவர்களின் வாழ்க்கையில் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தோல்விப்படங்கள்: அதாவது ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர், வாசு பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம், கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1, பீவி நம்பர் 1 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் தோல்வித்திரைப்பட அமைந்தால், தற்போது இவர் பெரும் கடன் சுமையில் சிக்கி உள்ளார்.
வேதனையில் நடிகை: கடன் சுமார் ரூ 250 கோடிக்கு மேல் என்பதால், நிலைமையை சமாளிக்க ஜாக்கி பக்னானி தனக்கு சொந்தமாக இருந்த 7 மாடி கட்டிடத்தை விற்பனை செய்துள்ளார். மேலும் தனது அலுவலகத்தை மும்பை ஜுஹு பகுதிக்கு மாற்றி உள்ளார். திருமணமான நான்கே மாதத்தில் கணவர் இப்படி ஒரு கடன் சுமையில் சிக்கியதை நினைத்து ரகுல் ப்ரீத் சிங் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











