ஒற்றை காலில் கொலுசு..கடற்கரை மணலில் ஒய்யார நடை.. வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்!
சென்னை : ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்தவர். ஸ்பைடர் படத்தில் சப்பியான ரகுலுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் சமீக காலமாக அவர் உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியான புகைப்படத்தை சமூக வளைதலத்தில் பதிவிட்டார். அதை பார்த்த அவரது ரசிகர்கள். ரகுலா இது என்று கேட்கும் அளவிற்கு மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.

சப்பியான புஷ்டியான இவரை பார்த்து பழகி போன ரசிகர்களுக்கு ஒல்லியான ரகுலை ஏற்க முடிய வில்லை என்பது தான் உண்மை. அதனால் உடற்பயிற்சி செஞ்சது போதும் என்று நெட்டிசன்ஸ் கேலி செய்து வருகின்றனர்.
ஆனால் பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் ஒல்லியான ஹீரோயின்களையே விரும்புகின்றனர். அதனால் பாலிவுட் வட்டாரத்தில் இவ்வளவு ஒல்லியான ரகுலா என்று வியப்புடன் பார்த்து ரசிக்கின்றனர். வியந்து பாராட்டவும் செய்கின்றனர். அதனால் இந்த ஊரடங்கில் நேரம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும்,போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஒல்லியான ரகுல் பல விதவிதமான உடைகளை அணிந்தும் அதனை வைரலாக்கி வருகிறார். தற்போது, கடற்கரையில் வெள்ளை நிற உடையில், ஒய்யாரமாக நடந்து வரும் போட்டோஸ் வெளியாகி உள்ளது. அதில், இடுப்பு தெரிய, ஒன்றை காலில் கொலுசுடன் கடற்கரை மணலில் நடந்து வருகிறார். இவரின் இந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் ஹைலைட்டே அந்த ஒற்றை கால் கொலுசுதான் அவருக்கு அவரின் அழகை கூட்டுகிறது. ஒல்லி சப்பி , பப்லி போன்ற இரண்டு வகையான ரகுலும் ரசிகர்களிடையே லைக்ஸ் அள்ளுகிறார்..

தனக்கு உடற்பயிற்சி மட்டும் அல்லாமல் சமையலும் தெரியும் என்று காட்டும் விதமாக பாஸ்தா போன்ற விதவிதமான டிஷ்களை சமைத்து அந்த வீடியோவை வெளியிட்டார். சரியாக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி, மாடலிங், சமையல் போன்ற பல வேலைகளை நேரம் தவறாமல் செய்து வருவது பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications











