காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. பிரதமர் மோடியால் திருமணத்தில் ஏற்பட்ட மாற்றம்!
சென்னை: ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நாணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர். தற்போது இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது. ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
தமிழில் அருண்விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால், பெரிதாக வலம் வரமுடியவில்லை. அதன் பிறகு முன்னணி நடிகர்களான கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த போதும், அதில் ர்குல் ப்ரீத்திற்கு சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிய ரோல் இல்லை.

இதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதை தள்ளிப்போட்டு பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது, சிறிய கேப்புக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரகுல் ப்ரீத் சிங்: தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருக்கும் ஜாக்கி பக்நாணியை காதலித்து வந்த நிலையில் இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் முதலில் வெளிநாட்டில் நடக்க முடிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி வெளிநாட்டில் விசேஷங்களை கொண்டாட வேண்டாம். நம் நாட்டிலேயே செய்யுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அதை கருத்தில் கொண்டு திருமணத்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கோவாவில் திருமணம்: இந்த ஆண்டு இவர்களின் திருமணத்தை நடத்த இருவரின் பெற்றோர் முடிவு செய்த நிலையில். தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் கடற்கரை அருகே வரும் பிப்ரவரி 21ந் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் திருமண அழைப்பிதழ் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











