திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்தாரா பிரபல நடிகை? காதலருடன் சீக்கிரமே கை கோர்க்க தயாராகி விட்டாராம்!

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது ரகசிய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், கூடிய விரைவிலேயே மேளச் சத்தம் முழங்க காதலரின் கரத்தை பற்ற போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் கொடிகட்டி பறந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் இவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆல் ஏரியாவிலும்

ஆல் ஏரியாவிலும்

தமிழில் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்தியில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என ஆல் ஏரியாவிலும் அசத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தான் காதலர்

இவர் தான் காதலர்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்பட்டது. ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது நீண்ட நாள் ரகசிய காதலரை அதிரடியாக சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார். தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜக்கி பக்னானி என்பவரை காதலித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்

திருமணம் எப்போ

திருமணம் எப்போ

இந்நிலையில், சமீபத்தில் வட இந்திய மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமணம் எப்போ பண்ண போறீங்க என்கிற கேள்வி எழுந்ததும் உடனடியாக வெட்கப்பட ஆரம்பித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் அது தொடர்பான முடிவை நான் எடுத்து விட்டால் உடனடியாக வெளிப்படையாக அறிவித்து விடுவேன் எனக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

வரும் 2022ம் ஆண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளார் என்றும் அது தொடர்பான வேலைகள் தீவிரமாக குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சினிமாவில் பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனால், அவரது திருமணம் இப்போதைக்கு இருக்காது என்றும் அதனை தள்ளிப் போடவே அவர் விரும்பி வருவதாகவும் சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கணவரும் சினிமா துறையை சார்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு பிறகு தடையில்லாமல் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க முடியும் என்பதால் எதிர்பார்ப்பது போல அடுத்த ஆண்டே திருமணம் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X