காசுக்கேட்டு சுற்றி வளைத்த பிச்சைக்காரர்கள்.. சிக்கி தவித்த சூர்யா பட நடிகை.. வைரலாகும் போட்டோ!
மும்பை: நடிகை ரகுல் பிரீத் சிங் பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு திணறிய சம்பவம் வைரலாகியுள்ளது.
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமானார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழில் நடிகர் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் ரகுல்.

பிச்சைக்காரர்கள்
இந்நிலையில் மும்பையில் ஷாப்பிங் செய்ய ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றார் ரகுல் பிரீத் சிங். ஷாப்பிங்கை முடித்துவிட்டு காருக்கு வந்த ரகுலை அங்கிருந்த பிச்சைக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.

திணறிய நடிகை
மேலும் பணம் கேட்டும் அவர் நச்சரித்துள்ளனர். இதனால் செய்வதறியாது திணறினார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

பரபரப்பு
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பிச்சைக்காரர்களிடமிருந்து ரகுலை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களிடம் திட்டு
ரகுல் பிரீத் சிங் பிச்சைக்காரர்களிடம் சிக்கிய போட்டோக்கள் வைரலாகியுள்ளது. அண்மையில் டிரெஸ் விஷயத்தில் சிக்கி ரசிகர்களிடம் திட்டு வாங்கினார் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











