பிகினியில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்!

சென்னை: இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

மேலும் இவர் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

பாலிவுட்டிலும் வெற்றிகரமாக பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது பிகினி உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

கன்னடத்தில் போக்ரி

கன்னடத்தில் போக்ரி

இயக்குனர் செல்வா ராகவன் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி கன்னடத்தில் போக்ரி என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரைத்துறையில் ரகுல் பிரீத் சிங் அறிமுகமானார். தமிழ் சினிமாவிற்கு யுவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் அதை தொடர்ந்து அருண் விஜய்யுடன் இணைந்து நடித்த தடையற தாக்க நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

புத்தகம்,என்னமோ ஏதோ போன்ற படங்கள் ரகுல் பிரீத் சிங்குக்கு வெளியானது. அதன்பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ரகுல் பிரீத் சிங் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்பைடர் மூலம் தமிழ் சினிமாவில் நிமிடம் என்ட்ரி கொடுத்தார். சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை இடத்தை பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

இன்று நேற்று நாளை என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் அயலான் படத்தை இயக்கி வருகிறார். சயின்ஃபிக் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்

பிகினி உடையில் ஸ்டைலிஷாக போஸ்

பிகினி உடையில் ஸ்டைலிஷாக போஸ்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு சில பிரச்சனைகளால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் கவர்ச்சியிலும் அதிக தாராளம் காட்டி வருகிறார். இப்போது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள ஹாட் புகைப்படத்தை ரசிகர்கள் வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X