நயன்தாராவிற்கே போட்டியா? பிஸ்னஸ் உமனாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்!

சென்னை: சினிமாவை பொறுத்த வரைக்கும் வாய்ப்பிருக்கும்போது சம்பாதிப்பது ஒரு கலை என்றால், சம்பாதித்த பணத்தை பல மடங்கு ஆக்குவது என்பது கைதேர்ந்த வித்தை. இதில் பெரும்பாலான கலைஞர்கள் தோற்றுவிடுவதால்தான் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங், உச்சத்தில் இருக்கும் போதே செட்டிலாகிவிட பிளான் போட்டு, ஹைதராபாத்தில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கி பிஸ்னஸ் உமனாகி உள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கன்னடத்தில் கில்லி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, யுவன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரன் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், டைரக்டர் விஜய் இயக்கும் லேடீஸ் நைட், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Actress Rakul preet singh to open Hotel in hyderabad

அனைத்து மொழியிலும் பிஸி: தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், 2013ம் ஆண்டு வெளியான வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து தெலுங்கில் ஹிட் கொடுத்தார். அதன் பின் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரகுல் பிரீத் சிங் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

காதல் திருமணம்: சினிமாவில் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் சுறுசுறுப்பான நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பகானி என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்த நிலையில், பிப்ரவரி மாதம் இவர்களின் திருமணம், கோவாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஜாக்கி பகானி, சில இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களின் தயாரிப்பாளராகவும் தொழில் செய்பவராகவும் உள்ளார்.

ஓட்டலை தொடங்கினார்: ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் தொழிலதிபராக இருக்கும் நிலையில், க்யூர் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பம் என்ற இந்த உணவகத்தை ஹைதராபாத்தில் உள்ள மாதப்புரில் வரும் 16 ம் தேதி தொடங்குகிறார். இங்கு, தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் கிடைக்கும் இந்த உணவகத்தின் அம்பாசிடராகவும் இருப்பார். இதுபற்றி ரகுல் ப்ரீத் சிங், எனது முதல் உணவகத்தை ஹைதராபாத்தில் திறப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் சுவையான, சத்தான உணவு என்ற இலக்கை கொண்டு இதைத் தொடங்கி இருக்கிறோம். எங்கள் உணவகம், உடலுக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கும் உணவளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சுவையான உணவு: ஐதராபாத்தில் எனது முதல் உணவகத்தை திறப்பது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கும் சத்தான, சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உணவகத்தை திறக்கிறோம். இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றார். உணவகம் தொடங்கும் ரகுல் பிரீத் சிங்குக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

https://tamil.oneindia.com/photos/nayanthara-vignesh-shivan-tamil-new-year-2024-celebration-photos-oi115880.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X