பிகினியில் நீச்சல் குளத்தில் துள்ளிக்குதிக்கும் கார்த்தி பட நடிகை!
சென்னை : தீரன் அதிகாரம் 1, தேவ் என கார்த்தியுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 ல் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்பொழுது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் துள்ளி குதிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் ஃபேவரிட் ரீல் கப்புள்
நடிகர் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் பணியாற்றி வரும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஜோடியாக நடித்து இருந்த நடிகை ரகுல் பிரீத் சிங் அதைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக தேவ் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். கார்த்தி உடன் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்ததால் இந்த ரீல் கப்புள் ரசிகர்களின் ஃபேவரிட் டாக மாறியது.

மலைவாழ் பெண்ணாக
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் உப்பண்ணா படம் ஹீரோ பஞ்ச வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக கொண்ட பொலம் என்ற படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்துள்ளார். இதுவரை ஸ்டைலிஷான பல கதாபாத்திரங்களில் தோன்றிய ரகுல் பிரீத் சிங் முதல்முறையாக மலைவாழ் பெண்ணாக வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்தியன் 2 ல் ஹீரோயினியாக
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினியாக ஒப்பந்தமாகியுள்ளார். சில காட்சிகள் மட்டுமே இப்படத்தில் எடுக்கப்பட்ட சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் இன்றுவரை இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடிகரை காதலிப்பதாக
ஹீரோயின்கள் என்றாலே வழக்கமாக ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்படும் ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக் பக்னனி என்பவரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் ஓப்பனாக புகைப்படங்களுடன் பதிவிட்டு தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் .

பிகினியில் நீச்சல் குளத்தில் வீடியோ
அடிக்கடி இருவரும் வெளியில் டேட்டிங் செல்லும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஹாட்டான பிகினி உடையில் நீச்சல் குளத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











