‘இந்தியன் 2’ நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்… தேவையில்லாத செலவு என நெட்டிசன்கள் கிண்டல்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் உருவாக இந்தியன் 2 திரைப்படம், தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா நடித்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என இந்தியன் 2 படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1996ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில், நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்த சின்ன சின்ன விஷயத்தையும், ஊழலையும் உணர்வுபூர்வமாக காட்டி இருந்தார். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அது காரணமாக அமைந்தது.

indian 2 Rakul preet singh salary 2

இந்தியன் 2: ஆனால்,இந்தியன் 2வில் இதுபோன்ற அம்சம் எதுவும் இல்லை என்றும், மொத்த ஊழலுக்கு காரணமான அரசியல்வாதிகளை பழிவாங்காமல், தொழிலதிபர்களை சேனாதிபதி பழிவாங்குவதும், 106 வயதில் அவர் ஒரு தனி ஆளாக செயல்படுவதை ஏற்றுகொள்ள முடியவில்லை என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் படத்தின் நீளம் இந்தியன் 2 படத்திற்கு ஒரு டிரா பேக்காக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால், காட்சிகளை நீக்கினால் படம் வெற்றி பெறும் என்ற பரவலான கருத்து இருந்து வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்: இப்படி படம் குறித்து நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், படத்தில் வந்ததே இரண்டு மூன்று காட்சிதான், அந்த காட்சியே தேவையில்லாதது அதற்கு இவ்வளவு சம்பளமா என்றும், இவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்ததற்கு இவர் படத்தில் இல்லாமலே இருந்து இருக்கலாம் பணமாவது மிச்சமாகி இருக்கும் என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டாவது முறை: இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார். அவர் ஏற்கனவே ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில், ஒரு சிலரின் காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X