பர்புள் அனார்கலியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்... என்ன ஒரு என்ன ஒரு அழகியடா!
சென்னை : நடிகை ரகுல் பிரீத் சிங் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்து அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது பர்புள் அனார்கலியில் மனதை கொள்ளைகொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி கன்னட ரீமேக் கில்லியில் நடித்து முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழுக்கு தடையற தாக்க மூலம் அறிமுகம் செய்யப்பட்டார் .

வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கில் கவனம்
அதைத்தொடர்ந்து புத்தகம்,என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் அதைத் தொடர்ந்து தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

மகேஷ்பாபு நடிப்பில் இருமொழிகளில்
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.
Recommended Video

இந்தியன்-2
நடிகர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக என்ஜிகே திரைப்படத்தில் நடித்தார்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்
நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் இந்தியன்2ல் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள அயலான் அனைத்து கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்து இப்பொழுது கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பர்புள் அனார்கலியில் செம அழகாக
அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் பர்புள் அனார்கலியில் செம அழகாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.


Click it and Unblock the Notifications