அந்த நடிகைகளுக்கு திமிரு அதிகம்.. கண்டுக்கவே மாட்டாங்க.. ரம்பா ஓப்பன் டாக்!

சென்னை: 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா, தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த், அர்ஜுன், பிரபு, பிரபுதேவா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு பிடித்த நடிகை குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பல தெலுங்கு படங்களில் நடித்த ரம்பா 1993 ஆம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து, கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Ramba interview

நடிகை ரம்பா: தொடர்ந்து செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார். சினிமாவில் கலக்கி வந்த ரம்பா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார்

இணையத்தில் ஆக்டிவ்: இதனிடையே ரம்பா, கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில். திருமணத்திற்கு பின் ரம்பா தனது கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிடித்த நடிகை: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரம்பாவிடம், சினிமாவில் உங்கள் தோழி யார் என்றும், பிடித்த நடிகை யார் என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரம்பா, திரைத்துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் சௌந்தர்யா தான். அவர் பேசுவதும் பழகுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, மகேஸ்வரி எனது சிறந்த தோழி. திரைத்துறையில் மிகவும் நெருக்கமான தோழிகள் என்று எனக்கு யாருமில்லை என்றார்.

த்ரிஷாவை பிடிக்கும்: இப்போது இருக்கும் நடிகைகளில் யார் பிடிக்கும் என்ற கேள்விக்கு, பதிலளித்த ரம்பா, தற்போது பல நடிகைகள் இருந்தாலும், த்ரிஷாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை ஓரிரண்டு முறை நான் பார்த்து இருக்கிறேன். அவர் உணர்வுப்பூர்வமாக நன்றாக பேசுவார். ஆனால் மற்ற நடிகைகள் அப்படி இல்லை. என்னை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள் என்று ரம்பா வெளிப்படையாக கூறினார்.

More from Filmibeat

Read more about: ramba interview ரம்பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X