twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிமுகவுக்கு தாவும் ரம்பா! தொட்டபெட்டா தொடையழகி ரம்பா அம்மா கட்சியில் ஐக்கியமாக முடிவு செய்துவிட்டாராம்.உள்ளத்தை அள்ளித் தந்த ரம்பா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைவைத்திருந்தவர், அதெல்லாம் அந்தக் காலம். இப்போது அவர் என்னதான் செய்தாலும்யாரும் சீந்துவதாக தெரியவில்லை.பிசியாக இருந்தபோது சம்பாதித்த மொத்தப் பணத்தையும் தூக்கிப் போட்டு, கூடவேமதுரை சினிமா பைனான்சியரிடம் ஏகப்பட்ட துட்டை கடனாக வாங்கி 3 ரோசஸ் என்றதேவையில்லாத ஒரு படத்தைத் தயாரித்தார். படம் ரம்பாவை தூக்கி பாதாளத்தில் வீசியதோடு,ஏகப்பட்ட வழக்குகளிலும் சிக்கவைத்து விட்டது. இப்போது ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்ரம்பா.வழக்குகளும் நீண்டு கொண்டே வருகின்றன, ரம்பாவின் துயரம் முடிவில்லாமல்நீண்டவண்ணம் உள்ளது. கோவிந்தா உள்ளிட்டோர் உதவியும் கரையேறமுடியவில்லை.இடையில் பாஜகவில் சேர்ந்து எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்தினார். அதுவும்எப்படி வாஜ்பாய் முன்னிலையில் சேர்ந்து அசத்தினார். ஆனால் அவர் கட்சியில்சேர்ந்த நேரமோ என்னவோ தாமரை தாறுமாறாக சிதறி தோல்வியைத் தழுவியது. இப்படியாக ரம்பாவின் அரசியல் பிரவேசம் சோகத்தில் முடிந்தது. அதன் பிறகு அவருக்கு அரசியல் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு வழக்குகள் அவரைப் போட்டு அமுக்கி விட்டன.நொந்து போய்க் கிடக்கும் ரம்பாவை, பேசாமல் வந்து அம்மா கட்சியில் சேர்ந்துவிடு, அத்தனை பிரச்சினைக்கும் அவர் முடிவு கட்டுவார் என்று ராதாரவி கூறியுள்ளார்.அவரது யோசனையைக் கேட்ட அப்படிச் சேர்ந்தால் எனக்கு என்னென்ன நன்மைகிடைக்கும் என்று கேட்டுள்ளார் ரம்பா. அடுக்க ஆரம்பித்தார் ராதாரவி,அவ்வளவுதான் ரம்பாவின் முகம் பளபளவென சந்தோஷத்தில் பூரித்துப் போய்விட்டதாம். காரணம், அவரது முக்கியமான கடன் தொல்லைகளுக்கு பூரண நிவாரணம் கிடைக்கும்என்று ராதாரவி கூறினால் அவருக்கு சந்தோஷம் வராதா என்ன.அத்தோடு லம்ப்பாக ஒரு அமவுண்ட்டும் அட்வான்ஸ் ஆக தரப்படும் எனவும்ராதாரவி கூறியுள்ளாராம். இதையடுத்து அம்மாவிடம் ஐக்கியமாகி விட அவர் முடிவுசெய்து விட்டாராம்.இப்படித்தான் சமீபகாலமாக அம்மா கட்சியில் சேர்ந்த பல நடிகைகளுக்கு ஒருஅமவுண்ட் கொடுத்துள்ளார்களாம் அந்தக் கட்சியினர். விரைவில் ரம்பா அம்மாவைப்பார்த்து வணங்கி பிரசாரத்திலும் குதிப்பாராம்.

    By Staff
    |
    தொட்டபெட்டா தொடையழகி ரம்பா அம்மா கட்சியில் ஐக்கியமாக முடிவு செய்துவிட்டாராம்.

    உள்ளத்தை அள்ளித் தந்த ரம்பா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைவைத்திருந்தவர், அதெல்லாம் அந்தக் காலம். இப்போது அவர் என்னதான் செய்தாலும்யாரும் சீந்துவதாக தெரியவில்லை.

    பிசியாக இருந்தபோது சம்பாதித்த மொத்தப் பணத்தையும் தூக்கிப் போட்டு, கூடவேமதுரை சினிமா பைனான்சியரிடம் ஏகப்பட்ட துட்டை கடனாக வாங்கி 3 ரோசஸ் என்றதேவையில்லாத ஒரு படத்தைத் தயாரித்தார்.

    படம் ரம்பாவை தூக்கி பாதாளத்தில் வீசியதோடு,ஏகப்பட்ட வழக்குகளிலும் சிக்கவைத்து விட்டது. இப்போது ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்ரம்பா.

    வழக்குகளும் நீண்டு கொண்டே வருகின்றன, ரம்பாவின் துயரம் முடிவில்லாமல்நீண்டவண்ணம் உள்ளது. கோவிந்தா உள்ளிட்டோர் உதவியும் கரையேறமுடியவில்லை.

    இடையில் பாஜகவில் சேர்ந்து எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்தினார். அதுவும்எப்படி வாஜ்பாய் முன்னிலையில் சேர்ந்து அசத்தினார். ஆனால் அவர் கட்சியில்சேர்ந்த நேரமோ என்னவோ தாமரை தாறுமாறாக சிதறி தோல்வியைத் தழுவியது.

    இப்படியாக ரம்பாவின் அரசியல் பிரவேசம் சோகத்தில் முடிந்தது.

    அதன் பிறகு அவருக்கு அரசியல் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு வழக்குகள் அவரைப் போட்டு அமுக்கி விட்டன.

    நொந்து போய்க் கிடக்கும் ரம்பாவை, பேசாமல் வந்து அம்மா கட்சியில் சேர்ந்துவிடு, அத்தனை பிரச்சினைக்கும் அவர் முடிவு கட்டுவார் என்று ராதாரவி கூறியுள்ளார்.

    அவரது யோசனையைக் கேட்ட அப்படிச் சேர்ந்தால் எனக்கு என்னென்ன நன்மைகிடைக்கும் என்று கேட்டுள்ளார் ரம்பா. அடுக்க ஆரம்பித்தார் ராதாரவி,அவ்வளவுதான் ரம்பாவின் முகம் பளபளவென சந்தோஷத்தில் பூரித்துப் போய்விட்டதாம்.

    காரணம், அவரது முக்கியமான கடன் தொல்லைகளுக்கு பூரண நிவாரணம் கிடைக்கும்என்று ராதாரவி கூறினால் அவருக்கு சந்தோஷம் வராதா என்ன.

    அத்தோடு லம்ப்பாக ஒரு அமவுண்ட்டும் அட்வான்ஸ் ஆக தரப்படும் எனவும்ராதாரவி கூறியுள்ளாராம். இதையடுத்து அம்மாவிடம் ஐக்கியமாகி விட அவர் முடிவுசெய்து விட்டாராம்.

    இப்படித்தான் சமீபகாலமாக அம்மா கட்சியில் சேர்ந்த பல நடிகைகளுக்கு ஒருஅமவுண்ட் கொடுத்துள்ளார்களாம் அந்தக் கட்சியினர். விரைவில் ரம்பா அம்மாவைப்பார்த்து வணங்கி பிரசாரத்திலும் குதிப்பாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X