Rambha: காட்டுத்தீயாக பரவிய ரம்பா விவாகரத்து செய்தி.. எங்களுக்குள் பிரச்னைகள் இருக்கு - ரம்பா ஓபன்!
இலங்கை: நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 2000களில் கலக்கிக் கொண்டு இருந்த டாப் நடிகை. அழகிய லைலா பாடலில் இவரது நடனம் இவருக்கு தென்னிந்தியாவின் மார்லின் மன்ட்ரோ என பெயர் வாங்கிக் கொடுத்தது. குடும்பக் கதாபாத்திரங்கள் தொடங்கி, துணிச்சலான கதாபாத்திரங்கள் வரை அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கியவர் ரம்பா. இவரது பெயரை டைட்டில் கார்டில் போடும்போது, 'தொடையழகி ரம்பா' என தமிழ் சினிமா பதிவு செய்துள்ளது.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தகவல் பரவியதை அடுத்து நடிகை ரம்பா அதுகுறித்து பேசியுள்ளார்.

ஏற்கனவே கூறியதைப்போல் நடிகை ரம்பா 2000களில் தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகர்களுடன் நடித்தார். கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகியாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தார். பல படங்களில் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து அட்டகாசப்படுத்தியுள்ளார். இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படங்களில் எல்லாம் எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியுள்ளார். அதாவது திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அண்மையில் கூட நடிகர் விஜய்யை தனது குடும்பத்துடன் சந்தித்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

விவாகரத்து: இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ரம்பா விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. குறிப்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவதாகவும் பல விஷயங்களில் இருவரது கருத்தும் மாறுபட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இந்தத் தகவல் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில், நடிகை ரம்பா விவாகரத்து செய்தி தொடர்பாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது, " நான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது. ஏன் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள் எனத் தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. எங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரச்சனை: மேலும், "கணவன் மனைவி என்றாலே இருவருக்கும் இடையில் சில பிரச்னைகள் வரும். அதுபோல எங்களுக்கு இடையிலும் சில பிரச்னைகள் அவ்வப்போது வரும், இது சாதாரணமான விஷயம். குழந்தைகள் தொடர்பான முடிவுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும்", கூறினார். அதாவது, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் அமெரிக்கா செல்லலாம் எனக் கூறியதாகவும், ரம்பா இந்தியா செல்ல விரும்புவதாகவும் அதனால் இருவருக்கும் இடையில் கொஞ்சம் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
: ரம்பா திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச காலம் அவரது கணவருடன் தொழிலைச் செய்துவந்தார். குழந்தைகள் பிறந்த பின்னர், தொழிலை விட்டுவிட்டு, குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 7 வயது வரை அவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு மிகவும் முக்கியம். அதனை தான் கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் ரம்பா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ரம்பாவின் விளக்கம் அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











