Rambha: கஸ்டம் ஆபீசரை ஏமாற்றினேன்.. பேட்டியில் உளறிய ரம்பா.. வெடிக்கும் சர்ச்சை!
சென்னை: அழகிய லைலா... இது இவளது ஸ்டைலா என பாட்டில் பாவாடையை பறக்கவிட்டு இளசுகளை வலைத்துப்போட்டவர் தான் நடிகை ரம்பா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் இவர் சொன்ன விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்பா. அந்த படத்தைத் தொடர்ந்து, ரஜினி,கமல், பிரபு, கார்த்திக், பிரபுதேவா, சத்யராஜ், அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். தனது வசீகரமான அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரம்பாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ரம்யா தற்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

நடிகை ரம்பா: இந்நிலையில், நடிகை ரம்யா, யூடியுப் சேனல் ஒன்றுக்கு வீட்டை சுற்றிக்காட்டிய வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், தனக்கு மரம், செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் இதனால் தனது வீட்டில் மருதாணி செடி, கறிவேப்பிலை செடி, கற்றாழை, துளசி மற்றும் செம்பருத்தி போன்ற அனைத்து விதமான செடிகளையும் தானே வளர்ந்து வருகிறார். குறிப்பாக, மருதாணி செடியில் ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. இது இலங்கையில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்பட்டது.



Click it and Unblock the Notifications











