பிரபுதேவாவின் மகளை பாருங்க.. செம க்யூட்.. நடிகை ரம்பா வெளியிட்ட போட்டோ!
சென்னை: நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா ஹிமானி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2023ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது நடிகை ரம்பா, பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசி உள்ளார்.
பிரபுதேவா அக்னி நட்சத்திரம் படத்தில் க்ரூப் டான்ஸராக தனது பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, வானத்தை போல என அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பின்இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபுதேவா போக்கிரி, வில்லி,வெடி, எங்கேயும் காதல் ஆனால், அவர் இயக்கி படங்களை அனைத்தும் வெற்றி பெறாததால், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இரண்டாவது திருமணம்: பிரபுதேவா க்ரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதால், பிரபுதேவா,2020 ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2023ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் வருகை குறித்து மிகுந்த சந்தோஷம் தெரிவித்தாலும், குழந்தையின் பெயரை அவர் இதுவரை பொதுமக்களிடம் வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்து இருக்கிறார்.
ரம்பா சந்திப்பு: இந்நிலையில், 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை ரம்பா, சமீபத்தில் பிரபுதேவாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு, பழைய நினைவுகளை மீட்டெடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நடிகை பிரபுதேவா மற்றும் ரம்பா இருவரும் 90களில் தமிழ் சினிமாவில் ஹிட் ஜோடியாக திகழ்ந்தவர்கள். இவர்களின் ஆட்டம், கவர்ச்சி மற்றும் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக காதலா காதலா, விஜபி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் நடனங்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்போது, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த இந்த நட்சத்திரங்கள், தங்கள் நட்பு இன்னும் மாறாததை நிரூபித்துள்ளனர். பிரபுதேவாவின் குடும்பத்துடன் ரம்பா எடுத்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











