நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது.. கலா மாஸ்டர் செய்த வேலை.. ரம்பா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: கலா மாஸ்டர் 40 வருடங்கள் சினிமாவில் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பல நடிகர்கள் கலந்து கொண்டு கலா மாஸ்டரை பாராட்டினார்கள். இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை ரம்பா, அவரை பற்றி பல விஷயத்தை மனம் திறந்து பேசினார்.
இதில் பேசிய நடிகை ரம்பா, எனக்கு நடனத்தில் வணக்கம் சொல்லிக் கொடுத்தது கலா மாஸ்டர் தான். அவர்களை நான் முதன் முதலில், ஊட்டியில் ஒரு படப்பிடிப்பின் போது தான் பார்த்தேன். அப்போது, நாலு நாளில், ஐந்து பாடல்களை எடுக்க வேண்டி இருந்தது. அதுவும் ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு உடை மாற்ற வேண்டும் என்பதால், நான் பயந்து விட்டேன். அந்த காலத்தில் கேரவன் இல்லை, காரில் துணியை பிடித்துக் கொண்டுதான் உடையை மாற்ற வேண்டும். அப்படி இருந்த போதும், நான்கு நாட்களில் 5 பாடல்களை எடுத்த ஒரே டான்ஸ் மாஸ்டர் இவங்கதான். மற்ற நடன இயக்குனர்கள், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டு தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரா அவருக்கு ஏற்றபடி செய்யக்கூடியவர் கலா மாஸ்டர்.

நடிகை ரம்பா: தனக்காக எந்த விஷயத்தையும் இவங்க செய்யவே மாட்டாங்க, தன்னுடைய குடும்பத்துக்காக தான், பல விஷயங்களை செய்வாங்க. கலா மாஸ்டரை ஒரு இரும்பு பெண்மணி என்று சொல்லலாம். ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்தால் அதற்காக உயிரை கொடுத்து உழைப்பார்கள். இவருடைய உழைப்பால் மட்டுமேஇந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். என்னுடைய திருமண விஷயத்தில் இருந்து இப்போது வரை, எதுவாக இருந்தாலும் நான் இவர்களிடம் தான் முடிவு கேட்பேன். மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான், எனக்கும் என்னுடைய கணவருக்கும் காதலே வந்தது.
கர்ப்பமாக இருக்கும் போது: என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் ஒருவர் தான் கலா மாஸ்டர். எனக்கு கனடாவில் வளைகாப்பு நடந்த போது, திடீரென வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்து. அந்த விழாவில் டான்ஸ் ஆடியது மட்டுமில்லாமல், எட்டு மாத கர்ப்பமாக இருந்த என்னை ஆட வைத்தார். எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் சொல்வது மாஸ்டரிடம் தான். எப்போதுமே மற்றவர்களை பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் கலா மாஸ்டர் தன்னைப் பற்றியும் தனது கணவர் குழந்தைகளை பற்றியும் நினைக்க வேண்டும் என்று நடிகை ரம்பா அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











