Actress Rambha: நடிகை ரம்பா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.. அட அப்படியேதான் இருக்காங்க!

சென்னை: நடிகை ரம்பா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர்.

சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா என்ற படம் மூலம் இவருக்கு தமிழில் சிறப்பான அறிமுகம் கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் ரம்பா.

Actress Rambhas recent click in Instagram impresses fans

தொடர்ந்து அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடிகை ரம்பா: நடிகை ரம்பா ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கின் ஜோடியாக நடித்திருந்தார் ரம்பா. படத்தை சுந்தர் சி இயக்கியிருந்த நிலையில் முழுநீள நகைச்சுவை படமாக இந்தப் படம் வெளியானது. படத்தில் கார்த்திக் -கவுண்டமணி காம்பினேஷன் சிறப்பாக அமைந்திருந்தது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி: இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை ரம்பாவிற்கு பெற்று தந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் ரம்பா. அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோசஸ் என ஹிட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது கவர்ச்சிகரமான நடிப்பு ரசிகர்களை கட்டிப் போட்டது.

2010ல் திருமணம்: தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டில் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ரம்பா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தன்னுடைய குடும்பத்தினரின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ரம்பா. அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தினருடன் தான் இருக்கும் புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டார். இந்நிலையில் தற்போது தான் தனியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Actress Rambhas recent click in Instagram impresses fans

இளமை குறையாத ரம்பா: காலங்கள் ஆனாலும் இளமை குறையாமல் ரம்பா அப்படியே உள்ளதாக ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். புடவையில் மிகவும் எளிமையாக காணப்பட்டாலும் இந்த புகைப்படம் பழைய ரம்பாவை நியாபகப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ரம்பாவை 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து தன்னுடைய குழந்தைகள், கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

ஹரிஹரன் நிகழ்ச்சியில் ரம்பா: டிசம்பர் 21ம் தேதி இலங்கையில் நடக்கவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்ச்சியிலும் தான் பங்கேற்கவுள்ளதாக ரம்பா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனை காலங்களாக தன்னுடைய குடும்பம், குழந்தைகள் என்றிருந்த ரம்பாவை தற்போது பொதுவெளிகளில் அதிகமாக பார்க்க முடிகிறது. விரைவில் சினிமாவிலும் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: rambha instagram ரம்பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X