எல்லா ஆண்களையும் ஜெயில்ல போடலாமா?.. ஆண்களை நாயுடன் ஒப்பிட்ட நடிகை.. குவியும் கண்டனம்!
சென்னை: நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை ரம்யா, தெருநாய்கள் பிரச்சினை தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு அவர் அளித்துள்ளார். அதில், ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசிய பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவன வளாகங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குப் பிறகு, நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் : தெருநாய்கள் குறித்த உத்தரவுக்கு எதிரான பல நகரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணையின் போது, தெருநாய்கள் பாதுகாவலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், விலங்குகள் அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது அல்லது அவற்றின் வசிப்பிடம் ஆக்கிரமிக்கப்படும்போது நாய்த் தாக்குதல்கள் பெரும்பாலும் நிகழ்கின்றன என்றும், விலங்குகளிடம் இரக்கம் காட்டுவது இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க உதவும் என்று வாதிட்டார். அப்போது,
நீதிபதிகள் சார்பில் பதிலளித்த நீதிபதி விக்ரம் நாத், இந்த அக்கறை கடிப்பதையும் தாண்டி பொதுவான அச்சுறுத்தல் குறித்த உணர்வு வரை நீடிப்பதாகக் கூறினார். "காலையில் எந்த நாய் எந்த மனநிலையில் இருக்கிறது என்பதை உங்களால் எப்படி அடையாளம் காண முடியும்?" என்று அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.
மோசமானவங்க: உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து பதிலளித்த நடிகை ரம்யா, "ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது. அவன் எப்போது பாலியல் பலாத்காரம் செய்வான் அல்லது கொலை செய்வான் என்று தெரியாது, அதனால் எல்லா ஆண்களையும் சிறையில் அடைத்துவிடலாமா?" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். நாய்களை ஆண்களுடன் ரம்யா ஒப்பிட்டு பேசியதற்கு இணையத்தில் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











