ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணன் தான்.. என்னா அழகு பாருங்க!

சென்னை : நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

Ramya Krishnan - Nayanthara | Amman Movies | Mookuthi Amman

பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற பல நடனங்கள் கற்று திரையுலகிற்குள் வந்தார் ரம்யா கிருஷ்ணன். தனது 14 வயதில் தனது முதல் திரைப்படமான வெள்ளை மனசு படத்தில் நடித்தார்.

 Actress ramya krishnan latest photo shoot

அடுத்த தனது இரண்டாவது படமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். இதன் பின் பல படங்களில் நடித்த இவர் வரிசையாக கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற திரையுலகில் கால் பதித்தார்.

 Actress ramya krishnan latest photo shoot

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் பல ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். இவர் தொகுத்த தங்க வேட்டை ஷோ இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை சின்னத்திரையில் பெற்று தந்தது.

 Actress ramya krishnan latest photo shoot

வெள்ளித்திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை பேசப்படுகிறது மற்றும் நீலாம்பரி போன்ற ஒரு கதாபாத்திரம் இன்று வரை சினிமாவில் கிடைக்கவில்லை.

 Actress ramya krishnan latest photo shoot

தற்போது ஒரு விழாவிற்கு வந்திருந்த அவர் அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒன் சைட் சாரீ போட்டு, ஸ்லீவ் லஸ்சுடன் சும்மா சூப்பரா போஸ்கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் கூட அவரது அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை. ரம்யாகிருஷ்ணனுக்கு நிகர் ரம்யாகிருஷ்ணன்தான் என்று கருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X