என்ன ராஜமாதா இதெல்லாம்.. 53 வயதிலும் குறையாத அழகு.. ரம்யா கிருஷ்ணனின் க்யூட் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் வில்லி, கதாநாயகி, குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் வெளுத்து வாங்கிவிடுவார். இவரைப்பார்த்து பல ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு வயசே ஆகாதா என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இளமையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.
80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பெயர் எடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து தெலுங்கு பக்கம் சென்றார். இதன் பிறகு தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தோரோட்டமா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். முதலில் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடவே மாட்டேன் என்று மறுத்துள்ளார்.

அவரை சமாதானப்படுத்தி படத்தின் முழுக்கதையையும் சொல்லிய பிறகுதான் அந்த பாடலுக்கு ஆடவே சம்மதித்தார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில ஹிட்டடித்து ரம்யா கிருஷ்ணனுக்கு சினிமாவில் மறுவாழ்க்கை கொடுத்தது. ஆனால், தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடவே வாய்ப்பு வந்ததால் ரம்யா கிருஷ்ணன் கடுப்பானார்.
படையப்பா நீலாம்பரி: ஹீரோயினாக மட்டுமில்லை அம்மன் கதாபாத்திரம் என்றாலே கூப்புடு ரம்யா கிருஷ்ணனை என சொல்லும் அளவுக்கு இவரது முகத்தில் தெய்வீக களை தாண்டவம் ஆடும். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து, படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இந்த கதையை ரஜினிகாந்திடம் சொன்னதும், நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதே ரஜினி தான். இதை பல முறை ரம்யா கிருஷ்ணன் பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படம் ரம்யா கிருஷ்ணனை தென் இந்திய அளவில் பிரபலமாக்கியது.
ராஜமாதா: படையப்பா படத்தில் வில்லியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் ஜெய் மகிழ்மதி என ரம்யா கிருஷ்ணன் கர்ஜிக்கும் போது உண்மையில் உடம்பே சிலிர்த்துவிடும் அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் ரியலாக இருந்தது. இந்த படம் இவரை உலக அளவில் பிரபலமாக்கியது.
என்ன ராஜமாதா: சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது கவர்ச்சி தூக்கலாக இருக்கக்கூடிய வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன ராஜமாதா இதெல்லாம்.. என்றும் 53 வயதில் இத்தனை அழகா என்று கேட்டு இந்த போட்டோவை இணையத்தில் டிரெண்டாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











