நடிகை ரம்யா நம்பீசனின் 'சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்..' இணையத்தில் இது புதிய முயற்சியாம்ல!
சென்னை: பிரபல நடிகை சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்க இருக்கிறார்.
தமிழில், ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக் கூட்டம், சேதுபதி உட்பட சில படங்களில் நடித்தவர், ரம்யா நம்பீசன்.
மலையாளப் படங்களிலும் நடித்துவரும் இவர், சில ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

அஸ்தமனக் குறிப்பேடுகள்
இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், யூடியூப் மியூசிக் சேனல் ஒன்றைத் தொடங்கினார். இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார்.

தவறி விடுகிறோம்
எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லையாம். இதுபற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது.

கவனிக்காமல் இருக்கிறோம்
சுற்றுச்சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை, இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து விவரித்து வழங்கும் நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்ததாவது: நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம்.

நம்பகத் தன்மை
இணைய உலகின் பக்கம் திரும்பி பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறோம். இதை வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை. இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இதைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

பிளான் பண்ணிப் பண்ணணும்
என் யூட்யூப் சேனலில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன். இவ்வாறு நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். ரியோ ராஜ் நடிக்கும் 'பிளான் பண்ணிப் பண்ணணும்' என்ற படத்தில் தற்போது, நடிகை ரம்யா நம்பீசனும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











