ராஜ உடையில் கம்பீரமான போஸ்.... கலக்கும் ரம்யா நம்பீசன்

சென்னை : நடிகை ரம்யா நம்பீசன் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவரது படங்கள் வெளியாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரம்யா.

நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன்

மலையாளத்தில் ஆனசந்தம் என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரது தேர்ந்தெடுத்த கதைகளின்மூலம் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடித்த ரம்யா நம்பீசன் 60க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இவரது குரலில் வெளியான பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.

பின்னணி பாடல்கள்

பின்னணி பாடல்கள்

தமிழில் பாண்டியநாடு படத்தில் ஃபை ஃபை ஃபை, டமால் டுமீல் படத்தில் போகாதே, சகாப்தம் படத்தில் அடியே ரதியே முன்னோடி படத்தில் அக்கம் பக்கம் போன்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களும் சிறப்பானவை.

தமிழில் சிறப்பான படங்கள்

தமிழில் சிறப்பான படங்கள்

இந்த இரு படங்களிலும் விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். ஒருநாள் ஒரு கனவு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர், ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம், டமால் டுமீல், சைத்தான், சத்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சிறந்த நடிகை, துணை நடிகை, பின்னணி பாடகி உள்ளிட்ட பிரிவுகளில் இவர் விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் காணப்படும் ரம்யா, தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய படங்கள் குறித்த அப்டேட்களை பகிர்ந்து வருகிறார்.

புதிய புகைப்படங்கள்

புதிய புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் செய்து அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ராஜ உடையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கிறார். வித்தியாசமான இந்த கெட்டப்பில் வித்தியாசமான போஸ்களை கொடுத்து அசத்தியுள்ளார். புடவையிலும் சிறப்பான தோற்றத்தை அளிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X