வெட்கத்தின் அளவை கூட்டிய ரம்யா நம்பீசன்... மாடர்ன் அவுட்பிட்டில் ஜொலிப்பு

சென்னை : நடிகை ரம்யா நம்பீசன், தமிழ், மலையாளம் என தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பரபரப்பாக காணப்படும் அவர், அடுத்தடுத்து போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் அவுட்பிட்டின் சிறப்பான போட்டோஷுட்டை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

மலையாளத்தில் அறிமுகம்

மலையாளத்தில் அறிமுகம்

ஆனசந்தம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார். அழகான குரலுக்கும் சொந்தக்காரராக உள்ளார் ரம்யா. 12க்கும் மேற்பட்ட பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார். தமிழிலும் சிறப்பான பாடல்களை பாடியுள்ளார்.

 சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

தமிழில் ஃபை ஃபை ஃபை என்ற பாண்டிநாடு படத்தின் பாடலை பாடி வரவேற்பை பெற்றுள்ளார். டமால் டுமீல், சகாப்தம், முன்னோடி போன்ற படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் ஹீரோயினராக அறிமுகமாகி ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம், பீட்சா, டமல் டுமீல், சேதுபதி, சைத்தான், சத்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த பின்னணி பாடகி ஆகிய பிரிவுகளில் விருதுகளை வாங்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களிலும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுவரும் ரம்யா நம்பீசன், தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது புதுப்புது போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

புகைப்படங்கள் பகிர்வு

புகைப்படங்கள் பகிர்வு

இந்நிலையில் தற்போது மாடர்ன் அவுட்பிட்டில் சிறப்பான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் ரம்யா. முதலில் கனவு காணும் தோற்றத்திலும் அடுத்தடுத்த படங்களில் வெட்கத்தின் வகையும் இந்த புகைப்படங்களில் வெளிப்பட்டுள்ளது. அழகாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன இந்தப் புகைப்படங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X