காதலில் விழுந்த பிரபல நடிகை… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !
சென்னை : பிரபல நடிகை இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அந்த நடிகை ஏற்கனவே தொழிலதிபர் ரபேல் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தற்போது, அந்த நடிகை தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதால், யார் இவர், புது காதலாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நடிகை ரம்யா
கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா.

36 படங்களில்
சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தனுஷூடன் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும் .

திடீரென அரசியலில்
படங்களில் நடித்து வந்த ரம்யா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார். தற்போது, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, விரைவில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

நண்பருடன் நெருக்கம்
இந்நிலையில், நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதை அடுத்து, அந்த நபர், கரண் ஜோஷி என்பதும் ரம்யாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வருவதாக கன்னட திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுபற்றி ரம்யா எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











