Ramya pandian : வர வர உங்க போக்கே சரியில்லை..ஹாட் பேபியாக மாறிய ரம்யா பாண்டியன்!

சென்னை : இடையழகால் ரசிகர்களை வசியம் செய்த ரம்யா பாண்டியன் கருப்பு உடையில் அப்பட்டமாக போஸ் கொடுத்துள்ளார்.

டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது.

பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

Actress Ramya Pandian black dress photos trending on social media

இடையழகி : நடிகை ரம்யா பாண்டியன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்பு கிடைக்காததால், ஜாலியாக ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி புகழின் உச்சிக்கே சென்றார். இந்த போட்டோஷூட்டுக்கு பின் இடையழகி ரம்யா பாண்டியன் என பெயர் எடுத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய ரம்யா பாண்டியன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர், வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். அதன் பின் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார்.

Actress Ramya Pandian black dress photos trending on social media

மலையாள சினிமாவில் : நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலம் மலையாளம் சினிமாவில் ரம்யா பாண்டிய கால் பதித்து அதில் வெற்றியும் கண்டார். லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ரம்யா பாண்டியன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மூலம் மலையாள ஆடியன்சுக்கும் பிடித்த நடிகையாக மாறிவிட்டார்.

ஹாட் பேபி : என்னத்தான் கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடித்தாலும்,பட வாய்ப்பு இவரைத் தேடி வருவது குதிரைக்கொம்பாகவே உள்ளதால், இணையத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இலைமறைவாக கவர்ச்சி கட்டிவந்த ரம்யா பாண்டியன், தற்போது ஓபனாகவே கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார். தற்போது இவர் கருப்பு உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ், வர வர உங்க போக்கே சரியில்லை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X