போட்டோகிராஃபர் யாருப்பா.. இணயத்தை திணறவிட்ட ரம்யா பாண்டியன் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் விதவிதமான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் யாருப்பா இவங்க போட்டோகிராஃபர் என கேட்கும் அளவிற்கு அவரின் போட்டோ சும்மா தரமாக உள்ளது.
எப்போதும் லைம் லைட்டில் இருக்க ஹீரோயின்கள் எப்போதும் ஆசைப்படுவதால், அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
சிலர் பரபரப்பாக பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது என ஒவ்வொரு கதாநாயகிகளுக்கும் தனி ஸ்டைல்.

நடிகை ரம்யா பாண்டியன்: ஆனால், நடிகை ரம்யா பாண்டியனின் ஸ்டைல் விதவிதமாக போட்டோ எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துவது. நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

இடையழகி: அவரின் நோக்கமே, தனது அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோ எடுத்து வெளியிடுவதுதான். டம்மி பட்டாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படத்தில் நடித்த போது கிடைக்காத வரவேற்பு, வளைந்து நெளிந்து இடையழகை காட்டி ஒரே ஒருமொட்டை மாடி போட்டோஷூட்டால் பாப்புலராகிவிட்டார்.

வித்தியாசமான போட்டோ: இதையடுத்து,ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அது அவரை திருப்திப்படுத்தும் அளவிற்கு இல்லாததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு ரசிகர்களின் ஏடாகூட கருத்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

நவராத்திரி ஸ்பெஷல்: அண்மையில் இவர் நவராத்திரிக்கு போட்டோஷுட் எடுத்திருந்தார். மேலும் அதற்கு கேப்ஷனாக நவராத்திரி என்பது ஒவ்வொரு பெண்ணும் துர்காவின் ஆவியை தன்னுள் சுமந்திருப்பதை நினைவூட்டுகிறது - கடுமையான, நெகிழ்ச்சியான மற்றும் சக்திவாய்ந்த. தேவியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவோம், ஒவ்வொரு பெண்ணின் வலிமையையும் போற்றுவோம்' என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோ வைரலானது.

அதீத கவர்ச்சி: படத்தில் அதிக கவர்ச்சி காட்டாமல் நடித்து வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் வரைமுறையே இல்லாமல் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார். உள்ளாடைக்கு விளம்பரம் கொடுப்பது போல அவர் போட்ட ஒரு போட்டோ இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.


Click it and Unblock the Notifications











