Ramya Pandian: ரம்யா பாண்டியன் திருமணம் விரைவில்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் திரைப்படங்கள், டெலிவிஷன் என பிசியாக இருப்பவர். இவற்றையெல்லாம்விட இன்ஸ்டாகிராம் இவர் பதிவிடும் போட்டோஷுட் புகைப்படங்களே இவரை மிக அதிகளவில் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் இவர் வெளியிட்ட மொட்டைமாடி போட்டோஷுட் இவரை அனைத்து தரப்பினரிடையேயும் மிகவும் பிரபலமாக்கியது.
இந்தப் புகைப்படங்கள் பெயரை பெற்றுக் கொடுத்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கவில்லை. இதையடுத்து பிக்பாஸ், குக் வித் கோமாளி என அடுத்தடுத்த விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி தன்னுடைய ரசிகர்களை மேலும் அதிகமாக்கிக் கொண்டார். இதனிடையே இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் திரைத்துறையில் தன்னுடைய அறிமுகத்தை மேற்கொண்டார். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் அதிகமாக கவனம் பெறாத நிலையில் அடுத்தடுத்து ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்திருந்தார். நடிகர் அருண் பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியனுக்கு மாடலிங்கிலும் அதிகமான ஆர்வம் இருந்தது. தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மொட்டை மாடி போட்டோஷுட்: கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வீட்டில் இருந்த நிலையில், தன்னுடைய மொட்டைமாடி போட்டோஷுட் புகைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ரம்யா பாண்டிய்ன். புடவையில் தன்னுடைய இடுப்பழகை காட்டி இவர் இப்படி பகிர்ந்திருந்த புகைப்படங்கள் இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. இதனால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். தொடர்ந்து இந்த போட்டோஷுட்கள் தனக்கு அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் கைக்கொடுத்தன.
ரம்யா பாண்டியன் திருமணம்: இதனிடையே திருமணம் செய்யும் முடிவை ரம்யா பாண்டியன் தற்போது எடுத்துள்ளார். லவால் தவான் என்ற யோகா மாஸ்டரைத்தான் ரம்யா பாண்டியன் திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் அடுத்தமாதம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தவான் வாழ்வியல் டிரெயினராகயும் செயல்பட்டு வருகிறார். இவர்களது திருமணம் ரிஷிகேஷ் அருகில் உள்ள ஒரு கோயிலில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ரம்யா பாண்டியன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ரிஷிகேஷ் கோயிலில் திருமணம்: தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இணைந்திருந்தார். வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக நடிகை பூமிகா யோகா மாஸ்டர் பரத் தாகூரை காதலித்து கடந்த 2007ம் ஆண்டில் திருமணம் செய்த நிலையில் தற்போது யோகா மாஸ்டர் தவானை ரம்யா பாண்டியன் திருமணம் செய்யவுள்ளார். பூமிகா திருமணம் போலவே இவர்களது திருமணமும் கோயிலில் நடக்கவுள்ளது. ரிஷிகேஷ் அருகில் ரம்யா பாண்டியனின் திருமணம் நடக்கவுள்ளதால் பிரம்மாண்டமாக நடப்பது கேள்விக்குறிதான். இருந்தபோதிலும் கலக்கல் புகைப்படங்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











