எங்க வீட்டு கீரை.. பக்குவமா சமைக்கும் ரம்யா பாண்டியன்.. ஆரோக்கியமா இருங்க என அட்வைஸ் !
சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் தான் வீட்டில் வளர்த்த கீரையை சமைத்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பல தொழில்கள் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது புத்தகங்கள் படிப்பது சுற்றுசூழலை பாதுகாப்பது போன்ற விஷயங்களை செய்தாலும் இன்னும் பலர் பட்டினியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.

இத்தகைய சூழல் நிலவும் பொழுது இயற்கை தன்னை தானே புதுப்பித்துக் கொள்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு உதவும் வகையில் பலரும் மரங்களை நட்டு வருகின்றனர். இந்த ஒரு செயல் உண்மையில் கேட்க நன்றாகவே உள்ளது. இந்த நேரத்தில்தான் விவாசாயிகளின் அருமை பலருக்கு புரியும் என சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பலரும் தங்களின் வீட்டில் இயற்கை உணவுகளை உண்பதும் நல்லது தான் என்று கூறுகின்றனர்.
எனவே இந்த விவசாயம், மரங்கள் நடுவது, இயற்கை உணவு போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல நிச்சயம் ஒரு ஊடகம் தேவை என்பதை தாண்டி இதை சொல்வதற்கு நிச்சயம் ஒரு பிரபலம் தேவை ஏற்கனவே நடிகர் விவேக் அவர்கள் பல மரங்கள் நடும் பணியில் இருக்கிறார். அந்த வரிசையில் இயற்கை உணவை பற்றி ஒரு அழகான பெண் சொன்னால் கேட்காமலா போய்விடுவார்கள்.
ஆம் பிரபல நடிகை ரம்யா பாண்டியன் அதை பற்றி பதிவு ஒன்றை தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியான் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமாக இருப்பதற்கு காரணம் அவரின் கவர்ச்சிதான்.
சில படங்களே நடித்திருத்தாலும், இடுப்பு பார்முலாவை பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். லாக்டவுன் காரணமாக தனது பண்ணை வீட்டில் வசித்து வரும் இவர். கீரை செடியை வளர்த்து அதை சமைத்து சாப்பிடுவதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த செடியை வளர்க்க விதை போடுவதிலிருந்து அதை வளர்த்து எடுத்து சமைக்கும் வரை குட்டி குட்டி வீடியோவாக எடுத்து அதை சேர்த்து பின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இயற்கை உணவு சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.
வீட்டில் பெற்றோர்கள் சொன்னால் இளைஞர்கள் கேட்பார்களோ இல்லையோ நிச்சயம் ரம்யா பாண்டியன் போன்ற பிரபலங்கள் சொன்னால் இளைஞர்கள் இது போன்ற நல்ல காரியங்களை பின்பற்ற முயற்சியாவது செய்வார்கள். பார்க்கலாம் இன்னும் எத்தனைப்பேர் இதைபின்பற்றுகிறார்கள் என்று.


Click it and Unblock the Notifications











