இதுக்கு மேல முடியாது.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்.. கவர்ச்சி போட்டோஷூட்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய, அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். திருமணத்திற்குபிறகு கவர்ச்சி காட்டாமல் இருந்த அம்மணி மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
'டம்மி டப்பாசு' படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமான ரம்யா பாண்டியன். அந்த படம் தோல்வியை தழுவினாலும், இதைத்தொடர்ந்து வெளியான 'ஜோக்கர்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து, தேர்வு செய்து இவர் நடித்த படங்கள், இவருக்கு கை கொடுக்காமல் போனது. தனக்கான வாய்ப்பை தானே தேடத் துவங்கிய ரம்யா பாண்டியன். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோ ஷூட்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சமையல் செய்து அசத்தினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் வரை வந்தாலும், இவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போனது. இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் அதிரடியாக களமிறங்கினார்.

ரம்யா பாண்டியன்: இதையடுத்து, யோகா பயிற்சி எடுக்க ரிஷிகேஷுக்கு சென்ற போது, அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லவல் தவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. கங்கை நதிக்கரையில் உள்ள கோவிலில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தென்படாமல் இருந்த ரம்யா பாண்டியன், கணவர் மற்றும் குடும்பத்தோடு இருக்கும் போட்டோவை மட்டுமே பதிவிட்டு வந்தார். அதன் பின் சமையல் வீடியோவை வெளியிட்டு வந்தார். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
கிளாமர் வீடியோ: இதையடுத்து, மீண்டும் ரம்யா பாண்டியன் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளர். தற்போது, மிக நேர்த்தியான லுக் மற்றும் தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆனதை அதிகாரப்பூர்வமாக காட்டியுள்ளார். அந்த வீடியோவில், ரம்யா பாண்டியன் எளிமையாக, அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரின் ஸ்டைலிஷ் போஸ், கவர்ச்சியை வெளிப்படுத்தும் லைட் மேக்கப் மற்றும் நம்பிக்கையுடன் நிறைந்த அவரது முகபாவனை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே , லைக் மற்றும் கமெண்ட்கள் வந்து குவிகின்றன. "திருமணத்திற்குப் பிறகு ரம்யா மிஸ் பண்ணிட்டோம் என ஏங்கிய ரசிகர்களுக்கு "குயின் இஸ் பேக்" என்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அசத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











