கனவு நனவான தருணம்... மம்முட்டியுடன் மலையாள படத்தில் இணையும் ரம்யா பாண்டியன்!
சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ரம்யா பாண்டியன் மலையாள படமொன்றில் கமிட் ஆகியுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன்
தமிழில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அவரது அடுத்த படமான ஜோக்கர் அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும் அவருக்கு சிறப்பான வகையில் கை கொடுத்துள்ளது.

கவர்ச்சி படங்கள்
ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்கள் மூலம் கவர்ச்சியான படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் இந்த படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக புடவையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தது.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலம்
இதை அடுத்து விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளிலும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இவை அனைத்தும் இணைந்து தற்போது அவருக்கு மலையாள பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது.

மம்முட்டியுடன் ஜோடி
மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன். லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் தான் தற்போது கமிட்டாகியுள்ளார் ரம்யா பாண்டியன். இதன் மூலம் மலையாளத் திரையுலகில் அவர் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ரம்யா பாண்டியன் மகிழ்ச்சி
தற்போது மம்முட்டியுடன் நடிக்க உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன் தன்னுடைய கனவு இதன் மூலம் நனவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரம்யா.
Recommended Video

மலையாளத்தில் ரம்யா பாண்டியன்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி புகழ், சிவாங்கி உள்ளிட்டவர்கள் தற்போது சினிமாவில் சிறப்பாக நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் சில படங்களில் நடித்து தற்போது மிகுந்த புகழுடன் விளங்குகிறார். மலையாள நடிகைகள் தமிழில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் மலையாளத்திற்கு செல்வது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











