Ramya pandian: ஒய்யாரமாக இடுப்பழகை காட்டிய ரம்யா பாண்டியன்.. ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மயங்கிப்போய் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சினிமாவில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று கனவோடு இருந்த ரம்யாவிற்கு டம்மிபட்டாசு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையடுத்து இயக்குனர் ராஜுமுருகனின் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற போதும் ரம்யாவிற்கு எதிர்பார்த்த வாய்ப்பு வரவில்லை.

நடிகை ரம்யா பாண்டியன்: இதையடுத்து மொட்டைமாடியில் இடையழகை காட்டி விதவிதமாக போட்டோசை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோ ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதால், தொடர்ந்து இணையத்தில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிய, இன்ஸ்டாகிராம் குயினாகி மாறினார் ரம்யா.
பிக்பாஸ், குக்வித்கோமாளி: இதையடுத்து, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் வட்டாரம் மேலும் பெரியதானது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார் ஆகிய நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்.
காதல் திருமணம் தான்: அண்மையில், ரம்யா பாண்டியன் அளித்த பேட்டியில், நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன். என்னுடைய காதலுக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நான் அதெல்லாம் தாண்டி காதல் திருமணம் செய்வேன். திருமணம் நடைபெறும்போது அனைவருக்கும் கூறுவேன் என்றார். இவர் இப்படி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பாண்டியன் காதலில் விழுந்துவிட்டாரோ என்று கேட்டு வருகின்றனர்.
கிக் ஏத்தும் போட்டோ: சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், ரம்யா பாண்டியன், மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்யாமல், மிகவும் சிம்பிளாக இடையை வளைத்து நெளித்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாவாடை தாவணியில், இடையழகை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் லைக்குகளை பெற்று வருகிறது. மூன்று மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கணிசமான வருமானம் வந்துக்கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











