இடையழகி ரம்யா பாண்டியன்..மறக்கமுடியாத புகைப்படம்..ஓடி வந்த ரசிகர்கள்!

சென்னை : ரம்யா பாண்டியனை பார்ப்பதற்கே ஓடி வரும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களால் இன்ஸ்டாகிராமே கலங்கிக் கிடக்கிறது.

டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது. இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன்.

பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரா வெற்றியை பெற்றது.

மொட்டை மாடி போட்டோஷூட்

மொட்டை மாடி போட்டோஷூட்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்பு கிடைக்காததால், ஜாலியாக ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் செய்திருந்தார். இந்த போட்டோஷூட் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது மட்டும் இல்லாமல் இடையழகி ரம்யா பாண்டியன் என் பெயரையும் பெற்றுத்தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய ரம்யா, அடுத்ததாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை முன்னேறிய ரம்யா, நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

மாடர்ன் கவனில்

மாடர்ன் கவனில்

சமீபத்தில் வயநாடுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ரம்யா பாண்டியன், அங்கு போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். அதில், மாடர்ன் கவுன் அணிந்து காட்டுக்குள் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் ஏராளமான லைக்குகளை பெற்றது.

ஹாலிவுட் ஹீரோயின்

ஹாலிவுட் ஹீரோயின்

படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் இவர் போட்டோஷூட் என வந்துவிட்டால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை அவரது தம்பி பரசுபாண்டியன் எடுத்துள்ளார்.

தரமான புகைப்படம்

தரமான புகைப்படம்

தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பார் செட்டப்பில் செருப்பை கழட்டிவிட்டபடி அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X