கருப்பு சேலையில் இடையழகை காட்டி ரசிகர்களை தவிக்க விடும் ரம்யா பாண்டியன்!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் சின்னத்திரையை தொடர்ந்து இப்பொழுது வெள்ளித்திரையிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவருக்கு இப்போது மலையாளத்திலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன

அடிக்கடி போட்டோ ஷூட் களின் மூலம் இணைய தளத்தை கதிகலங்க வைக்கும் ரம்யா பாண்டியன் இப்பொழுது கருப்பு சேலையில் இடையழகு தெரிய அழகிய புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை தவிக்கவிட்டு உள்ளார்.

விமர்சன ரீதியாக

விமர்சன ரீதியாக

மிக பிரபலமான திரைக் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது சொந்த முயற்சியின் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக முன்னேறி உள்ளவர் நடிகை ரம்யா ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆன இவருக்கு அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜுமுருகனின் ஜோக்கர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜோக்கர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று பல விருதுகளை வென்று இருந்தாலும் இதில் ரம்யா ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடிக்கடி மொட்டை மாடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் வெளியிட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படங்கள் ஓவர் நைட்டில் வைரலாகின . அதைத் தொடர்ந்து இவரை ரசிகர்கள் கூட்டம் பின்பற்றத் தொடங்கியது

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிய பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. குக் வித் கோமாளியைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அதிரடியாக களம் இறங்கினார்.

எதிர்மறையான விமர்சனங்களை

எதிர்மறையான விமர்சனங்களை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ரம்யா தான் வெற்றி பெறுவார் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் அந்தக் கருத்து நிகழ்ச்சியின் 50ஆவது நாட்கள் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது அதன் பிறகு ரம்யா பாண்டியன் பல சர்ச்சைகளில் சிக்கி சில எதிர்மறையான விமர்சனங்களையும் கண்டதால் அந்த வெற்றி வாய்ப்பு அவரைவிட்டு விலகியது. இறுதியாக இறுதிச் சுற்று வரை சென்று வெளியேறினார்.

Recommended Video

Abhiyum Naanum | Ramya Gowda Exclusive | Thalapathy Vijay னா உசுரு | Filmibeat Tamil
கருப்பு சேலையில் இடையழகு தெரிய

கருப்பு சேலையில் இடையழகு தெரிய

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஒவ்வொரு படத்திலும் கவர்ந்து வரும் ரம்யா பாண்டியனுக்கு இப்போது மலையாள திரைத்துறையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றுள்ளது. அந்த வகையில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ரம்யா பாண்டியன் கலக்கிக் கொண்டு இருந்தாலும் இவர் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது கருப்பு சேலையில் இடையழகு தெரிய ரசிகர்களை சுண்டி இழுக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை தவிக்க விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X