இடுப்பழகி ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ட்ரீட்.. இணையத்தை அதிரவைக்கும் சேலை வீடியோ

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படுகிற நடிகை. வாய்ப்புக்காக கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்காமல், தனது மனதைக் கவர்ந்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். திருமணம் ஆகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது அழகான வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மொத்த இணையத்தையும் சுண்டி இழுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் பேசும் நடிகை. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக்த்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மானே தேனே பொன்மானே என்ற ஷார்ட் பிலிம் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் டம்மி பட்டாசு என்ற தமிழ் படத்தில் நடித்து திரை உலகில் கால் பதித்தார்.

Actress Ramya Pandian Recent Cotton Saree Video Goes Viral

ஆரம்ப காலம்: 2016ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படமான ஜோக்கர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரை மக்கள் மத்தியில் பெருமளவுக்கு கொண்டு சேர்த்தது என்றால் அவரது மொட்டை மாடி போட்டோ சூட் தான். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. அவரது தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் என்ற படத்தில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 களமிறங்கி டாப் 4வது இடத்தைப் பிடித்தார். இது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி சீசன் 1இல் கலந்து கொண்டு அசத்தினார்.

வீடியோ: இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவது என்பது வாடிக்கையான ஒன்றாக வைத்துள்ளார். அதுவும் கிளாமர் பக்கம் எட்டிப் பார்க்காமல், ஹோம்லி லுக்கில் எப்படி ரசிகர்களைக் கவர்வது என்பதில் ரம்யா பாண்டியன் கை தேர்ந்தவர். தனது திருமணத்திற்குப் பின்னரும் அவர் தனது ரசிகர்களுக்காக வீடியோ பகிர்ந்து வருகிறார். அதில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X