அரபிக்கடலோரம் ஓர் அழகை கண்டேனே.. ரம்யா பாண்டியனின் அழகு புகைப்படம்!

சென்னை: எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி எப்போதும் லைம் லைட்டில் இருப்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். அவருக்கு எதிர்பார்த்த அளவு படங்கள் வரவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் படுபிஸியாகவே இருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் தனது இடையழகை வெளிச்சம் போட்டு காட்டி, சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு நடிக்க பட வாய்ப்பு வருதா இல்லை என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. எனக்கு இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம், ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோக்களுக்கு ரசிகர்களின் ஏடா கூட கருத்து வந்தாலும் அதை கண்டுகொள்வதே இல்லை.

Actress Ramya pandian Saree photoshoot trending on social media

போட்டோஷூட் மோகம்: போட்டோ ஷூட்களுக்காக, தாராளமாக செலவு செய்யவும் அஞ்சாத ஹீரோயின்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு கடற்கரையில் ஹாயாக அமர்ந்துகொண்டு, கடலை பார்த்தபடி, கடல் அலையில் அமர்ந்தபடி, மணலில் உருண்டபடி என விதவிதமான போட்டோ எடுத்துத் தள்ளுகின்றனர். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்யாமல், மொட்டைமாடி போட்டோவிலேயே பாப்புலர் ஆகிவிட்டார் ரம்யா.

காற்று வாங்கும் நடிகை: இவர் பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர், கடற்கரையில் மெல்லிய சேலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில், புடவையை காற்றில் பறக்கவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் கவிதை பாடி, அவருக்கு சிவப்பு இதயத்தை பரிசாக அளித்துள்ளனர்.

விஜய் டிவியில்: ஜோக்கர், ஆண்தேவதை போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்ளில் நடித்த ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதில், கோமாளியான புகழ் இவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தது, மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் நடந்து கொண்டது ரசிகர்களுக்கு பிடிக்காததால் பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் அவரால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X