வெட்க சிரிப்புடன் ரம்யா பாண்டியன்... வீக் எண்ட் ஸ்பெஷல் போட்டோஸ்!
சென்னை : இடையழகி ரம்யா பாண்டியன் தன்னை வளர்த்து விட்ட ரசிகர்களை மறக்காமல் அழகிய புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது. இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன்.
பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

ரம்யா பாண்டியன்
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்பு கிடைக்காததால், ஜாலியாக ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் செய்திருந்தார். இந்த போட்டோஷூட் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது மட்டும் இல்லாமல் இடையழகி ரம்யா பாண்டியன் என் பெயரையும் பெற்றுத்தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய ரம்யா, அடுத்ததாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டில் நுழைந்தார்.

மலையாளத்தில்
நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலம் மலையாளம் சினிமாவில் ரம்யா பாண்டியன் கால் பதிக்கிறார். லிஜோ ஜோஸ் இயக்கும் இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக இணைகிறார். தமிழ் ரசிகர் பட்டாளம் ஏராளம் கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது முதல் முறையாக வேற்று மொழி படத்தில் நடிக்கவுள்ளார் .

புது போட்டோஸ்
படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ரம்யா பாண்டியன் போட்டோஷூட் என வந்துவிட்டால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். இந்த வகையில், மெல்லிய சேலையில் அழகிய தேவதைப்போல அழகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











