சிக்குனு சிறுத்த இடைக்கு இதை செய்தா போதும்.. ரம்யா பாண்டியனின் முரட்டு வொர்க் அவுட்!
சென்னை: மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பட வாய்ப்பு இல்லை என்றாலும், இணையத்தில் தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோவை ஷேர் செய்து எப்போதும் அவர்களை மிகிழ்ச்சியுடனே வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் தான் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் இணையத்தில் பரபரப்புக்காக எதையாவது பேசி அதை சர்ச்சையாக்கி அதன் மூலம் வைரலாவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி சில நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வருவதில்லை. சர்ச்சை நாயகி என்று பெயர் மட்டும் தான் கிடைக்கிறது.

லைம் லைட்: இப்படி எந்தவிதமான சர்ச்சையும் வேண்டாப்பா சாமி, நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோ எடுத்து வெளியிட்டு சம்பாதித்து வருகின்றனர். போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் இருந்து ஏடா கூட கருத்து வந்தாலும் அதை கண்டுகொள்வதே இல்லை.
போட்டோஷூட் மோகம்: இந்த போட்டோ ஷூட்களுக்காக, தாராளமாக செலவு செய்யவும் அஞ்சாத ஹீரோயின்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு கடற்கரையில் ஹாயாக அமர்ந்துகொண்டு, கடலை பார்த்தபடி, கடலலையில் அமர்ந்தபடி, மணலில் உருண்டபடி என விதவிதமான போட்டோ எடுத்துத் தள்ளுகின்றனர். இந்த வகை ஹீரோயின்கள் அதிகரித்துவிட்டார்கள்.
நடிகை ரம்யா பாண்டியன்: அப்படி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை செலவு செய்யாமல், மொட்டைமாடியில், தனது வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே போட்டோஷூட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். இணையதளத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் இவர், தனது ரசிகர்களுக்காகவே விதவிதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
அழகின் ரகசியம்: பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஜிம்மில் வியர்க்க விறுவிறுப்பாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் இடை அழகின் ரகசியம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











