திருவண்ணாமலையில் ரம்யா பாண்டியனுக்கு நடந்தது என்ன?.. நீங்க ஒரு அதிர்ஷ்ட தேவதை!

சென்னை: தமிழில் குறைந்த படங்களே நடித்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு பாராட்டை பெற்றிருக்கும் நடிகை இவர். இவரது மொட்டை மாடி போட்டோ ஷூட்டை பார்த்து தமிழ் திரையுலகமே பரபரப்பானது. இதுவரை இல்லாத அளவிற்கு அவருக்கு பெயரும் புகழையும் கொடுத்திருப்பது அந்த ஒரு போட்டோ ஷூட் தான். அதன் பிறகு அவருக்கு மொட்டை மாடி என்ற அடைமொழியும் கிடைத்தது. பஞ்சாப்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கும் நடிகைக்கு பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு அதிசயம் நடந்திருக்கிறதாம். அதை அவரே தெரிவித்திருக்கிறார்.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன். பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். ஜோக்கர் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனாலும், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பட வாய்ப்பிற்காக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம் தான். அதற்காக கொஞ்சம் விவகாரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்வார்கள். அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் அதேபோன்று நடிகை ரம்யா பாண்டியனும் போட்டோ ஷூட் நடத்தினார்.

actress-ramya-pandians-power-at-the-tiruvannamalai-girivalam

மொட்டை மாடி போட்டோ ஷூட்: ஆண் தேவதை படத்திற்கு பிறகு மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து படத்திலும் நடித்திருந்தார். இந்த நேரத்தில் திடீரென ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ ஷூட் காட்டுத்தீ போல் வைரலானது. இதில் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களும் இடம்பிடித்திருந்தன. அவர் நடித்த படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு இதற்கு கிடைத்தன. இந்திய அளவில் ரம்யா பாண்டியன் டிரெண்டிங் ஆனார். ஒரே நாளில் சென்சேஷனல் ஹீரோயினாக மாறினார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் ஆரிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வாங்கி கட்டி கொண்டார். பிக்பாஸில் இருக்கும் போதே நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளிலும பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்: சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இளசுகளின் சென்சேஷன் ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவ்வெல் தவான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறாராம். யோகா கிளாஸின் மூலம்தான் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்களது திருமணம் ரிஷிகேஷில் நடைபெற்றது. பின்னர், திருமண வரவேற்பு அண்மையில் சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் சோகம் ஆனாலும், வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

மாப்பிள்ளை வரதட்சனை: ரம்யா பாண்டியன் கல்யாணத்தின் போது பஞ்சாபி முறைப்படி ஆண்கள் தான் பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்ய வேண்டுமாம். அதன் படி ரம்யா பாண்டியனின் காதலன் லவ்வெல் தவான் லட்சக்கணக்கில் வரதட்சனை கொடுத்திருப்பதாக ரம்யாவின் அம்மாவே தெரிவித்திருக்கிறார். மணமகன் வீட்டார் ஒரு ரூபாய் கூட வரதட்சனை பெறவில்லை என ரம்யா பாண்டியனின் அம்மா தெரிவித்துள்ளார்.

அதிசயத்தை பார்த்த ரம்யா பாண்டியன்: திருமணத்திற்கு பிறகு லவ்வெலுடன் ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன் பிறகு தமிழ்நாட்டிற்கு பிடித்த கோயில்களுக்கு இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் சென்றிருந்த ரம்யா பாண்டியன் அங்கு நடந்த அதிசயத்தை பார்த்து ஆச்சர்யமடைந்திருக்கிறார். அதாவது, கிரிவலம் செல்லும் போது தன்னை மீறிய ஒரு சக்தி இருந்ததை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். எந்த கோயிலுக்கும் கிடைக்காத சிறப்பாக இதை பார்க்கிறேன் என்றும் திருவண்ணாமலை சிவன் கோயிலில் இப்படி ஒரு பவர் இருப்பதை பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதை இப்போது தான் தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார். மேலும், அங்கு அவருடன் கிரிவலம் வந்த ஒருவர் ரம்யா பாண்டியனை பார்த்து நீங்கள் ஒரு தேவதை, உங்களுடன் கிரிவல பாதையில் வருவதை அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு மெய்சிலிர்த்து ரம்யா பாண்டியன் அதையும் தனது சமூவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X