Just In
- 3 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 49 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு அது தெரியாது.. சும்மா சொன்னேன்.. தப்பாப் போச்சு.. நெளியும் ரம்யா பாண்டியன்
சென்னை : உண்மையில் எனக்கு சமைக்க தெரியாது சமைக்க தெரியும்னு சும்மா சொன்னேன் என்று ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.
இணையதளம் மூலம் பிரபலமாகி தற்போது தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக அசத்தி வருகிறார் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கிறது.

அதில் ஒன்று ரம்யா பாண்டியனிடம் புகழ் ஜொள்ளு விட்டு செய்யும் குறும்புத்தனங்கள் பலரால் ரசிக்கப்பட்டவை. ரம்யா பாண்டியனுடன் புகழ் இணைந்து சமைக்கிறார் என்றால் ரசிகர்கள் முடிவு செய்து விடுவார்கள் ஆகா கட்டாயம் இந்த வார நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இருக்கு என்று. அந்த அளவுக்கு இவர்கள் இருவரின் கூட்டணி மக்களை கவர்ந்த கூட்டணி .
ரம்யா பாண்டியன் எப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தார் என்றால் இணையதளங்களில் பிரபலமடைந்த பின் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து இருக்கிறார் அந்த நேர்காணல்களில் எனக்கு சமைக்க தெரியும் என தெரிவித்து இருக்கிறார் இதனை கவனித்துள்ள விஜய் தொலைகாட்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளது. இதனை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன் எனது நேர்காணல்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில், எனக்கு சமைக்க தெரியும் என்று பேசினேன் உண்மையில் எனக்கு சமைக்க தெரியாது இனிமேல் நேர்காணலில் கவனமாய் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில்.. வியட்நாம் வீடு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
கேபிஒய் புகழை அவர் நகைச்சுவைத்தனத்திற்கும் குறும்புதனத்திற்கும் சேர்த்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அவர் ரம்யா பாண்டியனிடம் மட்டுமின்றி பலரிடம் நல்ல அட்டூழியம் செய்து சிறந்த கோமாளியாக வலம் வருகிறார் .

குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பிக்பாஸ் போல அவரவரின் குணநலன்களின் வெளிப்பாடே நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம். இந்த நிகழ்ச்சியிலும் யாரும் நடிக்கவில்லை அவரவர்கள் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்றார்போலவே இருக்கிறார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர் .
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் ஓரளவுக்கு நல்ல குக்காக இருந்தாலும் அவருக்காக புகழ் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்கள் மனதை ரம்யா பாண்டியன் பக்கம் திருப்பி விடுகிறது. முக்கியமாக ரம்யா பாண்டியன் புகழுக்கு ஜோடியாக வந்து விட்டால் புகழை கையில் பிடிக்க முடியாது அந்த எபிஸோடு முழுவதும் புகழ் சிரித்து கொண்டே இருப்பார். புகழ் அத்தனை எதார்த்தமாக நகைச்சுவைக்காக செய்கிறாரா அல்லது உண்மையில் ரம்யா பாண்டியன் மனதில் இடம் பிடிக்க தான் செய்கிறாரா என்பதையே வாராவாரம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.