கோல்டு கலர் பிராக்கில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. அட்டகாசமான போட்டோ ஷூட்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மூன்றாவது ரான்னரப்பாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிப்பில் மட்டுமல்லாமல் அறிவிலும் மிகச் சிறந்தவராக விளங்கி வரும் ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் கூட்டம் உருவானது பின் பிக்பாஸில் கலந்துகொண்டு உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளார்.
படங்களில் ஹீரோயினியாக ஒப்பந்தமாகி வரும் ரம்யா பாண்டியன் இப்பொழுது தங்கச்சிலை போல ஜொலிக்கும் காஸ்ட்யூமில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார்.

மிகச் சிறப்பாக விளையாடி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் கடந்த சீசன் 4ல் 17 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியாளர் இவர்தான் என மக்களிடம் நம்பிக்கையைப் பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி
டம்மி டப்பாசு, ஜோக்கர்,ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த போதும் இவருக்கு கிடைத்திராத பெயரும் புகழும் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷுட்டில் ஓவர் நைட்டில் ஃபேமஸானார். இடுப்பைக் காட்டி எடுத்த அந்த ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் இவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்புகளையும் அள்ளித் தந்தது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய இவருக்கு மேலும் ரசிகர்கள் கூட்டம் பெருகியது.

மூன்றாவது ரன்னர் அப்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் டிவி உடன் பயணித்துக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனுக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வரும் வாய்ப்பும் கிடைக்க அதையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு கலக்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்று வரை சென்று மூன்றாவது ரன்னர் அப் இடத்தைப் பெற்றார்.

சூர்யாவின் தயாரிப்பில்
பிக்பாஸ் க்கு பிறகு நேர்மறையான விமர்சனங்களுக்கு சமமாக எதிர்மறையான விமர்சனங்களும் வந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொல்லாமல் அடுத்த கட்ட வேலைகளைத் தொடங்கி ரம்யா பாண்டியன் இப்போது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பும் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது இதில் வாணி போஜன் மற்றுமொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

கோல்டன் காஸ்ட்யூமில்
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் ரம்யா பாண்டியன் போட்டோஷூட்டிலும் கலக்கி வர தங்கச்சிலை போல ஜொலிக்கும் அட்டகாசமான கோல்டன் காஸ்ட்யூமில் அசந்து போகும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் பகிர்ந்திருக்க பலரும் தாறுமாறாக வர்ணித்து வைரலாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











