பில்லா நயன்தாரா போல வேற லெவல் லுக்கில் ரம்யா பாண்டியன்!
சென்னை: தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை ரம்யா பாண்டியன்
இதுவரை மிகக்குறைந்த திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை முத்திரை பதித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வர இப்பொழுது பில்லா நயன்தாரா போல செம ஸ்டைலிஸ் லுக்கில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

விடா முயற்சியின் மூலம்
இப்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். மிகப் பெரிய திரைக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் திரைத்துறையில் தனது விடா முயற்சியின் மூலம் இப்பொழுது கதாநாயகியாக மாறியுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில்
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவ்வாறு தன்னுடைய படங்களில் ஒவ்வொன்றிலும் தன்னுடைய தனித்துவமாக நடிப்பை முத்திரை பதித்து வரும் ரம்யா பாண்டியனுக்கு சின்னத்திரை மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் ஆதரவைப் பெற்றார்.

கிராமத்து பெண் போல
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு பல மடங்கு ரசிகர்கள் பட்டாளம் உயர்ந்திருக்க இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்ற படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியிருப்பார். அதில் பக்கா கிராமத்து பெண் போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
Recommended Video

பில்லா நயன்தாரா போல
இதுவரை தமிழில் மட்டும் நடித்து வந்த ரம்யா பாண்டியனுக்கு மலையாள திரைத் துறையும் கதவுகளை திறந்து உள்ளது. அடுத்தது மலையாளத்திலிருந்து வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகைராக உள்ள மம்முட்டி அடுத்து நடிக்கும் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் ஆகி உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையாளத்திலும் நேரடியாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ள ரம்யா பாண்டியன் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகின்றன. அந்த வகையில் இப்பொழுது பில்லா நயன்தாரா போல செம ஸ்டைலிஷான கருப்பு உடையில் பார்க்கும் அனைவரையும் வாவ் சொல்ல வைக்கும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையதளத்தில் டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











