இந்த நடிகையை ஞாபகம் இருக்கா…மீண்டும் நடிக்க வராங்களாம் ?
சென்னை : சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை மீண்டும் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
கன்னட நடிகையான ரம்யா, புனீத் ராஜ்குமாருடன் இணைந்து அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார்.
தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை ரம்யா
நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை சினிமாவுக்காக ரம்யா என மாற்றிக் கொண்டார். பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார். கன்னடத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் ரம்யா.

36 படங்களில்
சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, தனுஷூடன் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், தமிழ்,தெலுங்கு என மொத்தம் 36 படங்களில் நடித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு வெளியான நாகரஹாவு என்ற கன்னட படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும் .

திடீரென அரசியலில்
படங்களில் நடித்து வந்த ரம்யா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி எம்பி ஆனார். கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்ததால் நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டார். தற்போது, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ரம்யா.

விரைவில் நடிப்பேன்
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீண்ட நாட்களாக எப்போது நடிக்க வருவீர்கள் என்று கேட்டு வருகிறீர்கள். நிச்சயம் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளேன். கடந்த சில நாட்களாக கதைகளை கேட்டுவருகிறேன், நல்ல கதையாக இருந்தால் விரைவில் திரையில் தோன்றுவேன். அதுவரை உங்கள் ஆர்வத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











