கணவருடன் பிரிவு.. நித்தியானந்தாவுடன் இருக்கிறேன்.. என் வாழ்க்கையே போயிடுச்சு.. ரஞ்சிதா கதறல்
சென்னை: நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தார். சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்டோருடன் நடித்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அந்தச் சமயத்தில் நித்தியானந்தாவுடன் அவர் இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு நித்தியானந்தரிடம் முழுதாக ஐக்கியமான அவர் இப்போது கைலாசாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நாடோடி தென்றல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக், சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் 2010ஆம் ஆண்டு வெளியான ராவணன் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நித்தியுடன் தொடர்பு: சூழல் இப்படி இருக்க கடந்த 2010ஆம் ஆண்டு நித்தியானந்தாவுடன் தனியறையில் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறினார். ஆனாலும் அவர்தான் அந்த வீடியோவில் இருந்தார் என்று ஒருதரப்பினர் தொடர்ந்து கூறினார்கள். இதனையடுத்து முழுக்க முழுக்க நித்தியானந்தாவிடம் ஐக்கியமானார் ரஞ்சிதா.
கைலாசா பிரதமர்: ஒருகட்டத்தில் நித்தியானந்தாவுக்கு இங்கு சிக்கல்கள் ஏற்பட தனது க்ரூப்புடன் தனி தீவுக்கு சென்று அங்கு கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருக்கிறார். அந்த நாட்டுக்கு ரஞ்சிதாவை பிரதமராக நியமித்து அதகளம் செய்தார் நித்தி. ரஞ்சிதாவும் இப்போது கைலாசாவின் பிரதமராக பணியாற்றிவருவதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் ரஞ்சிதா கொடுத்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகியுள்ளது.
ரஞ்சிதா பேட்டி: அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "எனது மரியாதையை மீடியாக்கள்தான் சேர்ந்து துகிலுரித்தார்கள். நான் பெரிய பணக்கார வீட்டு பெண் எல்லாம் இல்லை. எனது அப்பா தொழிலதிபரும் இல்லை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. அதுதொடர்பாக நடந்த வழக்கிலும் என்னை காப்பாற்றுவதற்கு எனது அப்பாவால் முடியவில்லை. இந்தப் பிரச்னையை நினைத்து தற்கொலை எண்ணத்துக்கு சென்றேன். பிறகு என்னை விட்டால் குடும்பத்தை பார்க்க ஆள் இல்லை என்பதால் அதிலிருந்து வெளியே வந்தேன்.
கணவர் பிரிந்துவிட்டார்: நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு என்றால் நான் ஷூட்டிங்கிலும் புத்தகமும், கையுமாக இருப்பேன் என்பதுதான். அந்தப் புத்தகங்கள்தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது. இருந்தாலும் அந்தக் கசப்பான அனுபவம் தந்த வலி தீராதது. எனது கணவரும் அதனால் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். எனக்கு நடந்த விஷயங்களை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆன்மீக வலிதான்: நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். எனது இளமை காலத்திலிருந்தே கடவுள், ஆன்மீகம் மீது நிறைய பற்று வைத்திருப்பவள் நான். அதை இன்றுவரை கடைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கலாம். ஆனால் நான் இன்றும் நித்தியானந்தாவின் சீடர்தான். இப்போதும் அவருடனேயேதான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











