Rashi kanna: ஹாரர் படங்கள் என்னோட ஜானரா மாறிடுச்சு.. ஜீவாவிடம் மல்லுகட்டிய ராஷி கண்ணா!

சென்னை: பேன்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள அகத்தியா படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக ஜனவரி மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது.

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Jiiva Rashi kanna Aghathiyaa movie

அகத்தியா படம்: நடிகர்கள் ஜீவா,அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அகத்தியா படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை பாடலாசிரியரும் இயக்குநருமான பா விஜய் இயக்கியுள்ளார். ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் என்ற கான்செப்டுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதிநவீன CGI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை இந்தப் படத்தில் பா விஜய் கையாண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மாஸ் காட்டிய ட்ரெயிலர்: முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. கடந்த மாதத்தில் படத்தின் ட்ரெயிலரை நடிகர் ஆர்யா, கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் வெளியிட்டனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இநதிய அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜானராக மாறிய ஹாரர் படங்கள்: இந்நிலையில் ஹாரர் படங்கள் தன்னுடைய ஜானராக மாறியுள்ளதாக படத்தின் நாயகி ராஷி கண்ணா பேட்டியொன்றில் கூறியுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 படங்களில் தான் நடித்துள்ளதால் அடுத்ததாக அகத்தியா படத்திலும் தான் இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே ராஷி கண்ணா அரண்மனை 4 படத்தில் ஆடியிருந்த அச்சோ அச்சோ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உடனிருந்த ஜீவா கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல் ஆடியபடி இந்தப் பாடலை அவர் பாடியும் காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜீவாவிடம் மல்லுகட்டிய ராஷி கண்ணா: முன்னதாக இந்தப் படம் குறித்து ராஷி கண்ணாவிடம் தமிழில் கேள்வி கேட்கப்பட்டபோது, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜீவா கூறினார். அப்போது அவரை இடைமறித்த ராஷி கண்ணா, ஐயோ ஜீவா எனக்கு தமிழ் ஓரளவிற்கு தெரியும், டிரான்ஸ்லேட் பண்ணாதீங்க என்று ஜீவாவிடம் க்யூட்டாக ரியாக்ட் செய்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளன. கடைசியாக பிளாக் படத்தில் நடித்திருந்த ஜீவாவிற்கு அகத்தியா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: jiiva rashi kanna ஜீவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X