தங்க நிறத்தில் இளவரசி போல ஜொலிக்கும் நடிகை ராஷி கண்ணா!
சென்னை : யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் மற்றும் இயக்குனர் ஜவஹர் இணைந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா.
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க அதன் இயக்குனர்கள் டீகே மற்றும் ராஜ் அடுத்தது பிரம்மாண்ட வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளனர் அதில் ஷாருக்கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ள ராஷி கண்ணா இப்பொழுது தங்க நிறத்தில் இளவரசி போல ஜொலிக்கும் ஆளை மயக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிறது.

கலவையான விமர்சனங்களை
கமர்ஷியல் ஃபார்முலாவில் பேய் படங்களை இயக்கி வெற்றியும் பெற்று வரும் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 1 மற்றும் 2- ல் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து அதன் மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சுந்தர் சி இயக்கி இருந்தார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பொதுவாக பேய் படங்கள் என்றால் கதாநாயகிக்கு தான் பேயாக வருவார் ஆனால் சற்று வித்தியாசமாக இந்த படத்தில் ஹீரோ ஆர்யாவுக்கு பேய் பிடித்திருக்கும். ஆர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா இதில் பிரமாதமாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . இன்னும் சொல்லப்போனால் இந்த வெப் சீரீஸ் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வரும் ஃபேமிலி மன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் டீ கே மற்றும் ராஜ் அடுத்து பிரம்மாண்ட வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளனர் . ஷாகித் கபூர், விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த சீரிஸில் நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சிற்றம்பலம்
தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ,உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா தமிழில் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குனர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்க தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

தங்க மாதிரி ஜொலிக்கும் இளவரசி
இரும்புத்திரை, ஹீரோ என தரமான படைப்புகளை கொடுத்துவரும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் அடுத்து கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வரும் சர்கார் படத்தில் ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சமீப காலமாக அதிக கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைரலாகி வரும் இவர் இப்பொழுது தங்க நிறத்தில் ஜொலிக்கும் இளவரசி போல ஆளை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











