பிங்க் டிரஸ்ஸில் புல் பாட்டில் ரோஸ்மில்க் போல கிக்கேற்றும் ராஷி!
சென்னை : தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து இப்போது முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ராஷி கண்ணா
கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3ல் கதாநாயகியாக நடித்திருந்தார்
கைவசம் இப்போது சர்தார், திருச்சிற்றம்பலம், மாதவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா பிங்க் டிரஸ்ஸில் புல் பாட்டில் ரோஸ்மில்க் போல கிக்கேற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன

தமிழில் அறிமுகம்
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா,சங்கத்தமிழன் ,வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுந்தர் சி அதன் இரண்டாவது பாகத்தையும் மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வந்தார் இதில் ஹீரோவாக ஆர்யா நடித்தார். அரண்மனை 3 கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஹாரர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யா மற்றும் ராஷி கண்ணா முதல் முறையாக ஜோடியாக நடித்து இருப்பார்கள்

மீண்டும் விஜய் சேதுபதியுடன்
சங்கத்தமிழன்,துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை தொடர்ந்து இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் புதிய வெப்சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா மூவரும் இணைந்து நடிக்கின்றனர்.

கார்த்தி இரட்டை வேடத்தில்
இரும்புத்திரை, ஹீரோ என தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்ட இயக்குனர் பிஎஸ் மித்ரன் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். துக்ளக் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சென்னையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது
Recommended Video

ஃபுல் பாட்டில் ரோஸ்மில்க்
யாரடி நீ மோகினியை தொடர்ந்து இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷி கண்ணா இப்பொழுது பிங்க் டிரஸ்ஸில் புல் பாட்டில் ரோஸ்மில்க் போல கிக்கேற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











